கோவை நிறுவனத்தின் கைவண்ணத்தால் தக... தக... தங்க நிறத்தில் ஜொலிக்கும் மாருதி எர்டிகா..!!

Written By:

கோவையை சேர்ந்த கிட்-அப் ஆட்டோமோட்டிவ்ஸ் என்ற நிறுவனம் கார்களை மாடிஃபிகேஷன் செய்வதில் இந்தியளவில் தனித்துவமாக இருந்து வருகிறது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

ஏற்கனவே மாருதி டிசையர் உட்பட பல்வேறு மாடல்களை கஸ்டமைஸ் செய்து அசத்திய நிறுவனம் தான் கிட்-அப் ஆட்டோமோட்டிவ்ஸ்.

தற்போது மீண்டும் மாருதி சுசுகியின் எம்.வி.பி ரக காரான எர்டிகாவை இந்த கோவையை சேர்ந்த நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்துள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

எர்டிகாவின் முன்பக்கத்தின் ஸ்போர்ட் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து காற்று வெளியேறும் வகையில் பெரிய ஏர்-இன்லெட்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

அதிக ஒளியை தரும் பனிபடர்ந்த இரண்டு விளக்குகள் மிகவும் மூர்கமான தோற்றம் தரும் வகையில் இந்த காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

Recommended Video - Watch Now!
Mercedes GLA Launch Tamil - DriveSpark தமிழ்
எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

எர்டிகாவின் முன்பக்கத்தை அடிப்படையாக வைத்து,பிளாஸ்டிக் பேனல்களால் ஆன க்ரில் மற்றும் கருப்பு நிற பிரோஜெக்டர் விளக்குகள் காரின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

ஸ்போர்டியர் தரமான லுக் என்பதால், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட எர்டிகா காரில் 17-இஞ்ச் டூயல் டோன் சக்கரங்கள் பெரியளவிலான ஸ்கூரு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

காரின் பின்பக்க வடிவமைப்பில் எஃப்.எக்ஸ் டூயல் எக்ஸாஸ்ட் அவுட்லெட்டுகள் மற்றும் பெரிய ஸ்பாய்லர் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த காருக்கு மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட தோற்றத்தை காட்ட தக தக தங்க நிற பூச்சு பூச்சப்பட்டு இருப்பது ஆக பொருத்தமாக உள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

வெளிப்புற தோற்றத்தில் மட்டுமில்லாமல், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட எர்டிகா காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு புதிய வடிவமைப்புகளை பார்க்க முடிகிறது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

அதன்படி, காரின் தங்க நிற தோற்றத்திற்கு இணையாக இருக்கைகள் உயர்ரக லெதரால் வைர வடிவிலான தையல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

அதை எடுப்பாக காட்ட, அதன் தோற்றத்திற்கு ஏற்றவாறு கருப்பு நிற பட்டை இருக்கையின் ஓரங்களில் மற்றும் காரினுல் மெட்டல் பாகங்கள் வரக்கூடிய இடங்களிலும் தைக்கப்பட்டுள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

பயணிகளுக்கான இருக்கையில் தலைமாட்டில் மற்றும் கழுத்து வகைக்கும் பகுதிகளில் எல்லாம் குஷன்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் சாதரண எர்டிகா கார் சொகுசான பல வசதிகள் ஆடம்பர எர்டிகாவாக காட்சியளிக்கிறது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

கிட்-அப் நிறுவனம் இந்த எர்டிகா காரின் மீது செய்துள்ள அனைத்து மாற்றங்களும் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளது.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த எர்டிகா காரில் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 88.7 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

எர்டிகா காரை தங்க நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்த கோவை நிறுவனம்..!!

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை பெற்றுள்ள இந்த கார், ஆட்டோமேட்டிவ் கியர்பாக்ஸ் தேவைகளிலும் மாருதி சுசுகி எர்டிகா கார்களை தயாரிக்கிறது.

English summary
Read in Tamil: Coimbatore Based KitAp Automotives Customised Maruti Ertiga into a luxurious Car. Click for Details...
Story first published: Friday, October 6, 2017, 16:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark