டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

By: DriveSpark Bureau

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார் தயாரிக்கும் பணிகளில் டொயோட்டா கார் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. மிக குறைவான விலையில் முதல் காரை அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக பிடபிள்யூ பிசினஸ் வேர்ல்டு தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

நிஸான் நிறுவனம் குறைவான விலை கார்களை டட்சன் பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. அதே பாணியில் டொயோட்டா நிறுவனமும் தனது குறைவான விலை பட்ஜெட் கார்களை டைகட்சூ பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

அதன்படி, புதிய ஹேட்ச்பேக் ரக கார் மாடலை டைகட்சூ பிராண்டில் அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

குறைவான விலை காருக்கான உதிரிபாகங்களை பெறுவதற்காக டட்சன் கார்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களுடன் டொாயோட்டா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் போன்ற கார்களுக்கு இந்த புதிய டைகட்சூ கார் நேரடி போட்டி தரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் ஆலையில்தான் இந்த காரும் உற்பத்தி செய்யப்படும்.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

டைகட்சூ பிராண்டில் உருவாக்கப்பட இருக்கும் இந்த புதிய பட்ஜெட் கார் மாடல் வரும் 2020ம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யவும் டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

ஜப்பானில் சிறிய வகை கார் தயாரிப்பில் டைகட்சூ முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தனது சிறிய வகை பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டைகட்சூ பிராண்டில் புதிய பட்ஜெட் கார்: டட்சன் சப்ளையர்களை அணுகிய டொயோட்டா!

இந்தியாவில் டைகட்சூ கார்கள் அறிமுகம் குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனருமான என்.ராஜா ஏற்கனவே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும்... #டைகட்சூ #daihatsu
English summary
Daihatsu To Develop Sub-Etios Car For India.
Please Wait while comments are loading...

Latest Photos