புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமான டட்சன் ரெடிகோ கார் 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் திறன் கொண்ட புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ரெனோ க்விட் காரில் இருக்கும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய டட்சன் ரெடிகோ காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் இன்டெலிஜென்ட் ஸ்பார்க் ஆட்டோமேட்டட் என்று குறிப்பிடப்படும் புதிய தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, அதிகபட்சமாக லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜ் வரை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

டட்சன் ரெடிகோ காரின் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் டி(ஆப்ஷனல்) மற்றும் எஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ரெனோ க்விட் காரின் 800சிசி மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் தோற்றத்தில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்த புதிய டட்சன் ரெடிகோ காரின் 800சிசி மாடலுக்கும், 1.0 லிட்டர் மாடலுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. காரின் பின்புறத்தில் 1.0 லிட்டர் என்ற பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பது மட்டுமே வேறுபாடாக கூற முடியும்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ரெனோ க்விட் கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதன் நேர் போட்டியாளராக வந்திருக்கும் இந்த புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் காரில் வழக்கமான மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மியூசிக் சிஸ்டமானது சிடி பிளேயர், ஆக்ஸ் போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

கூடுதல் திறன் பெற்ற எஞ்சினுடன் வந்திருப்பதால், டட்சன் ரெடிகோ காரின் சஸ்பென்ஷன் சற்று கடினத்தன்மையுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கையாளுமை சற்றே சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. மோசமான சாலைகளிலும் இது சிறப்பாக இருக்கும்.

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் காரின் டி ஆப்ஷனல் மாடல் ரூ.3.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ் வேரியண்ட் ரூ.3.72 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ரெனோ க்விட் 1.0 லிட்டர் மாடல், மாருதி ஆல்ட்டோ கே10 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2017, 16:22 [IST]
English summary
Datsun has launched the redi-GO 1.0-litre at a price of Rs 3,57,333. The latest variant of the car with a new heart has been launched a year after its base 800cc variant was first put on sale in the Indian Market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+