டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு புதிய கஸ்மடைஸ் பேக்கேஜ்: டிசி நிறுவனம் அறிமுகம்!

Written By:

அலுங்காமல், குலுங்காமல் பயணிப்பதற்கு இன்னோவாதான் முதல் தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், இன்னோவா காரின் சொகுசு வசதிகளை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் வகையில், டிசி டிசைன் நிறுவனம் தொடர்ந்து விசேஷ கஸ்மடைஸ் ஆப்ஷன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

கடந்த ஆண்டு புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட்ட உடன் புதிய கஸ்டமைஸ் பேக்கேஜ் ஒன்றை டிசி டிசைன் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜை டிசி டிசைன் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் உட்புறத்தில் ஏராளமான சொகுசு வசதிகளை சேர்த்துள்ளது டிசி நிறுவனம். இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகள் நீக்கப்பட்டு, மிக சொகுசான இரண்டு சாய்மான இருக்கைகள் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

பயணத்தின்போது அதனை போதிய அளவு சாய்த்துக் கொண்டு பயணிக்க முடியும். நீண்ட தூர பயணங்களின்போது இது மிக மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். மேலும், இரண்டு வரிசை இருக்கைகள் நீக்கப்பட்டுவிட்டதால், அதிக இடவசதி இருக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரில் பயணிப்பது போன்ற அனுபவத்தை இந்த காரிலேயே பெற்றுவிட முடியும்.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

இருக்கைகள், உட்புறம் டேன் லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புற இருக்கைகளுக்கு பின்னால் தடுப்பு ஒன்று கொடுக்கப்பட்டு, பின்புறத்தில் இருக்கும் இரண்டு இருக்கைகளும் தனி அறை போன்று தடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

அடுத்து மிகச் சிறப்பான பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன. நடுவில் இருக்கும் தடுப்பில் டிவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனை இரண்டு ராஜ இருக்கைகளுக்கு நடுவில் ஆர்ம்ரெஸ்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டன்கள் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

தொடு உணர் பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களால் லேசாக தொட்டால் போதுமானது. இவை மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும், கார் உட்புறம் முழுவதும் மர அலங்கார வேலைப்பாடுகளும் உயர் வகை சொகுசு கார்களை மிஞ்சுகிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

அத்துடன், மடக்கி விரித்துக் கொள்ளும் சிறிய லேப்டாப் மேஜைகளும் உள்ளன. பயணத்தின்போதே சாப்பிடுவதற்கும், லேப்டாப் போன்ற சாதனங்களை வைத்துக் கொள்வதற்கும் இது உதவும்.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

உட்புற கூரையில் விசேஷ விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை இரவு பயணங்களின்போது புதிய பரவசத்தை ஏற்படுத்தும். அதாவது, விமானத்திற்கு இணையான பயண அனுபவத்தை தரும்.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மற்றுமொரு கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

இந்த விசேஷ பேக்கேஜிற்கு ரூ.4.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேக்கேஜ் மூலமாக இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மதிப்பு பன்மடங்கு கூடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DC Design has customised the interior of the Toyota Innova Crysta. The luxury lounge features loads of features which takes the luxury to the next level. Read in Tamil.
Story first published: Saturday, March 25, 2017, 13:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark