பிஎம்டபிள்யூ கார் மோதியதில் மாருதி வேகன் ஆர் காரின் ஓட்டுனர் உயிரிழப்பு... ஏர்பேக் இருந்திருந்தால்..

Written By:

விளக்கம்:

காரின் பின்பகுதியில் மோதல் நிகழ்ந்தால் ஏர்பேக் விரிவடையாது. அதேநேரத்தில், பின்புறம் கார் மோதி வேகத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தபோதுதான் டிரைவரின் தலை ஸ்டீயரிங் வீலில் மோதி உயிரிழந்திருக்கிறார். அப்போது ஏர்பேக் விரிவடைந்திருந்தால், நிச்சயம் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதே கருத்து.

அதிவேக சொகுசு கார்களால் நடைபெறும் விபத்துக்கள் தொடர்கதையாகி உள்ளது. கடந்த ஞாயிறன்று இரவு 11.30 மணியளவில் தெற்கு டெல்லி பகுதியில் உள்ள முனிர்கா என்ற இடம் அருகே பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றது.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

கண்மூடித்தனமாக சென்ற அந்த பிஎம்டபிள்யூ சொகுசு எஸ்யூவி கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மாருதி வேகன் ஆர் காருடன் பயங்கரமாக மோதியது. சுமார் 2.2 டன் எடை கொண்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி கார் பின்னால் மோதியதில், 825 கிலோ எடை கொண்ட மாருதி வேகன் கார் 50 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

இதில், மாருதி வேகன் ஆர் காரின் பின்புறம் தகர டப்பா போல நசுங்கியது. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் மாருதி வேகன் ஆர் காரை ஓட்டி வந்த நஸ்ரூல் இஸ்லாம்[37] என்ற ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கோர விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை ஓட்டி வந்தவர், விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது. அவர் மதுபோதையில் இருந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்துக்கான பிஎம்டபிள்யூ காரின் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

அதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியை ஓட்டி வந்தது சோயிப் கோஹ்லி[24] என்பது தெரிய வந்தது. குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரை ஓட்டி வந்த நஸ்ரூல் இஸ்லாம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். விபத்துக்கு முந்தின நாள்தான் உபேர் நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டுனராக இணைந்துள்ளார். நஸ்ரூல் இஸ்லாமிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தில் 5 பேர் இருக்கின்றனர். அனைவரும் நஸ்ரூல் இஸ்லாம் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

இந்த நிலையில், நஸ்ரூல் இஸ்லாம் விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த நிலையில், விபத்தின்போது ஸ்டீயரிங் வீல் மீது நஸ்ரூல் இஸ்லாம் தலை மோதியதே மரணத்திற்கு வித்திட்டுவிட்டது.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

அதேநேரத்தில், அந்த மாருதி வேகன் ஆர் காரில் மட்டும் ஏர்பேக் இருந்திருந்தால், நஸ்ரூல் இஸ்லாம் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று கார் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறி உள்ளனர். ஏர்பேக் இருந்திருந்தால், ஸ்டீயரிங் வீலில் தலை மோதாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். பின்புறமாக மோதல் நிகழ்ந்தால் ஏர்பேக் விரிவடைந்திருக்காது. அதேநேரத்தில், மோதிய வேகத்தில் கார் மேலே தூக்கி வீசப்பட்டு பின்னர் கீழே விழுந்தபோதுதான் ஸ்டீயரிங் வீலில் நஸ்ருல் இஸ்லாம் தலை மோதி இறந்திருக்கிறார். கீழே விழும்போது ஏர்பேக் இருந்திருந்தால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

மேலும், நஸ்ருல் இஸ்லாமிற்கு உடலில் காயங்கள் இல்லை என்பதால், அவர் கண்டிப்பாக உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் மாருதி வேகன் ஆர் கார் மீது மோதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரும் முன்பக்கத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. ஆனால், அந்த காரில் ஏர்பேக் தக்க சமயத்தில் விரிந்ததாலேயே, அதனை ஓட்டி வந்த சோயிப் கோஹ்லி உயிர் தப்பி உள்ளார்.

ஏர்பேக் இருந்திருந்தால்... !!

ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றை இப்போது பெரும்பாலான கார் நிறுவனங்கள் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக சேர்த்து வருவது வரவேற்க்கத்தக்கது. அதேநேரத்தில், ஏர்பேக் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு இல்லாத கார்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதும் அவசியம். கார் வாங்கும்போது அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

Source: Hindustan Times

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் காரின் படங்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Delhi BMW accident: Uber Driver might have lived if his WagonR had an airbag
Please Wait while comments are loading...

Latest Photos