டென்ட்ரோபியம் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

Written By:

சிங்கப்பூர் நாட்டில் தயாரான முதல் ஹைப்பர் கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருக்கிறது. இது பேட்டரியில் இயங்கும் அதிவேக எலக்ட்ரிக் கார் மாடலாக இருப்பதும் நம் ஆவலைத் தூண்டுகிறது. இந்த புதிய ஹைப்பர் கார் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இலகுவான எடை, சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைன், ஹைப்ரிட் எரிபொருள் நுட்பம் ஆகியவை ஹைப்பர் காருக்கு உண்டான இலக்கணங்களாக பின்பற்றப்படுகின்றன. இதன் அடிப்படையில் புத்தம் புதிய ஹைப்பர் கார் மாடல் சிங்கப்பூர் நாட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

சிங்கப்பூரை சேர்ந்த வான்டா எலக்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த புதிய ஹைப்பர் கார் மாடலை உருவாக்கி உள்ளது. டென்ட்ரோபியம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வருகிறது.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்த காரின் கதவுகள் தானியங்கி முறையில் திறந்து மூடும் வசதி கொண்டது. டென்ட்ரோபியம் மலரில் இதழ்கள் விரிவது போன்று இந்த காரின் கதவுகள் தானியங்கி முறையில் விரிவடைவதால், அந்த மலரின் பெயரே இந்த காருக்கு சூட்டப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

இந்த புதிய ஹைப்பர் காரை ஃபார்முலா-1 கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வான்டா நிறுவனம் தயாரித்துள்ளது. மிகச் சிறப்பான வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புடன் தயாராகி உள்ள இந்த கார் செயல்திறனிலும் வியக்க வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

முன்புறத்தில் பெரிய ஏர்வென்ட்டுகள் கொாடுக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகளுடன் நவீன யுக காராக காட்சி தருகிறது. காற்றை விலக்கிக் கொண்டு செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைன் அம்சத்தை பெற்றிருப்பதோடு, பின்னோக்கிய இழுவிசை மிக குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

உட்புறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பல்வேறு தகவல்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தருவதற்கான மின்னணு சாதனங்களும் உள்ளன.

சிங்கப்பூரின் முதல் ஹைப்பர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!

கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸீ வில்லியம்ஸ் எஞ்சினியரிங் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. அதேபோன்று, மின் மோட்டாரின் சக்தியை சக்கரங்களுக்கு கடத்துவதற்கான அமைப்பையும் வில்லியம்ஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஹைப்பர் கார் அதிகபட்சமாக 1,500 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது புகாட்டி சிரோன் காருக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார ஹைப்பர் கார் மாடலாக வருவதுதான் இப்போது பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் கார் பிரியர்கள் மத்தியில் தூண்டி உள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Singapore's very first all-electric hypercar dubbed — the Dendrobium has been developed with the help of Williams Advanced Engineering.
Story first published: Friday, March 3, 2017, 10:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark