பி.எஸ். 4 எஞ்சினில் டெய்ம்லர் அறிமுகப்படுத்திய சொகுசுப் பேருந்து

பிரபல டெய்ம்லர் நிறுவனம், சென்னையில் உல்லாச பயணத்தை வழங்கும் ஆடம்பர பேருந்தை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களை அறிவோம்.

By Azhagar

டெய்ம்லர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வணிக வாகனங்களை உற்பத்தி செய்யும் DICV பாரத்பென்ஸ் சென்னையில், 16டி பி.எஸ்4 என்ற பெயரில் சொகுசு பேருந்தை வெளியிட்டுள்ளது. இதை பள்ளி அல்லது அலுவலக வாகனமாகவும் மற்றும் சுற்றுலா பேருந்துதாகவும் பயன்படுத்துவதற்கான வசதிகள் உள்ளது.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

16டன் எடைக்கொண்டதால் இந்த பேருந்திற்கான பெயரில் 16டி என்பதையும், மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பி.எஸ். 4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் அதையும் சேர்த்து பாரத்பென்ஸ் 16டி பி.எஸ்.4 என்று டெய்ம்லர் பெயரிட்டுள்ளது.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

இந்தியாவிற்கான டெய்ம்லர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மார்கஸ் வில்லிங்கர் பயணிகளுக்கான வசதிகளையும் மற்றும் பாதுகாப்பையும் வைத்து இந்த பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் , பேருந்தின் இந்த வடிவமைப்பு பயணிகளுக்கு மட்டுமில்லாமல், ஓட்டுநர்களுக்கு பரவசமளிக்கும் என்றும் மார்கஸ் வில்லிங்கர் தெரிவித்தார்.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

52 அடி நீளம் கொண்ட இந்த பேருந்தில் மத்தியரசின் வழிகாட்டுதலை ஏற்று சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பி.எஸ்.-4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பரந்த காட்சிகளை அளிக்கும் ஜன்னல்கள், முன் மற்றும் பின்பகுதிகளுக்கான ஏர் சஸ்பென்ஷன், எஞ்சின் சத்தம் கேட்காமல் இருக்க ஒலி காப்பு கருவி போன்ற வசதிகள் இதில் உள்ளன.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

மிகவும் ஸ்டைலான வடிவமைப்பை பெற்றிருக்கும் பாரத்பென்ஸ் பேருந்து 238 பி.எச்.பி பவரை வழங்கும். உலகளவில் டெய்ம்லரின் வணிக வாகனங்களில் உள்ள SCR தொழில்நுட்பம் (வினையூக்குகள் கட்டுபாடு) இதிலும் உள்ளது. இதனால் எரிவாயு வீணாவது தடுக்கப்பட்டு, வண்டியின் பராமரிப்பு செலவு மிச்சமாகும்.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

மேலும் இந்த SCR தொழில்நுட்பத்தில் உள்காற்றை வெளியேற்றும் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக வாகனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் நைட்ரஜன் ஆக்சைட்டை இது தண்ணீராக மாற்றி, பேருந்தின் எஞ்சினை காபாற்றும் நுட்பம் அறிந்தது.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

அலுமனியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்தின் கட்டமைப்பு பயணி, ஓட்டுநர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் அலுமனியம் எடை குறைவாக இருக்கும் என்பதால், வாகனத்தை செயல்படுத்துவதில் கடினங்கள் இருக்காது. மேலும், இந்த பேருந்தில் பெரிய பிரேக்குகள் உள்ளதால், பிரேக்கிங் சிஸ்டமும் பாரட்டப்பட வேண்டியதாக உள்ளது.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

வினைல் கொண்டு வடிவமைக்கப்பட்ட தரைத்தளம், தீ பிடித்தால் உணர்ந்து செயல்படக்கூடிய கருவிகள் ஆகியவை டெய்ம்லர் தாயரித்திருக்கும் பார்த்பென்ன்ஸ் பேருந்தின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

பார்தபென்ஸ் சொகுசு பேருந்தின் கட்டமைப்புகள் அனைத்தும் காற்றியக்கவியல் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படும். மேலும் இதில் டியூப்லெஸ் டயர் உள்ளதால் அவசரகாலத்தில் பேருந்தை வேகமாக இயக்ககூடிய சூழ்நிலையில் இழுவையோ அல்லது உராய்வோ ஏற்படாது.

சென்னையில் டெய்ம்லரின் சொகுசுப் பேருந்து அறிமுகம்

முன்னரே தெரிவித்தது போல எரிவாயு சிக்கனம், செயல்திறன் மற்றும் எளிய பராமரிப்பு ஆகியவற்றை மனதில் வைத்தே டெய்ம்லர் பாரத்பென்ஸ் 16டி பி.எஸ்.4 மாடல் பேருந்தை உருவாக்கியுள்ளது. இதற்கான பராமரிப்பு, வாரண்டி ஆகியவற்றிலும் டெய்ம்லர் தாராள மனதை வாடிக்கையாளர்களுக்கு காட்டியுள்ளது.

Most Read Articles
English summary
Daimler launches BharatBenz 16T BS-IV Intercity Coach with at chennai. This coach built with comfort and optimised for performance.
Story first published: Wednesday, April 19, 2017, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X