பழைய ஸ்விஃப்ட் காரை விட புதிய மாடலில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன..?? முழு விவரங்கள்..!!

Written By:

வாங்குகிறமோ... இல்லையோ, ஆனால் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காருக்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இந்தியாவில் ஸ்விஃப்ட் காருக்கு உள்ள சந்தையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், சுசுகி தயாரித்திருக்கும் புதிய ஸிவிஃப்ட் கார் 2018 டெல்லி எக்ஸ்போவின் போது வெளியிடப்படுகிறது

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

சமீபத்தில் வெளியான புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் டிசையர் காரின் சீசன் முடிவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய ஹேட்ச்பேக் மார்கெட் புதிய ஸ்விஃப்ட் காரின் வரவால் களைக்கட்டவுள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

அறிவிப்புகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த கார், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்விஃப்ட் மாடலில் இருந்து எவ்வாறெல்லாம் வித்தியாசப்படுகிறது...? பார்க்கலாம்...

வெளிப்புற கட்டமைப்பு

வெளிப்புற கட்டமைப்பு

2017 மாருதி ஸ்விஃப்ட் பார்ப்பதற்கு ஒரு சூப்பர்மினி போன்ற தோற்றப்பொலிவை தருகிறது. ஸ்போர்ட்ஸ் மற்றும் ப்ரீமியம் என்ற பெயர்களுக்கு ஏற்றவாறு இதனுடைய கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இருந்தாலும், புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் புரட்சிக்கரமான கட்டமைப்பை பெறவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் அதையும் தாண்டி இந்த கார் நம்மை கவர்கிறது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

புதிய தோற்றம் மற்றும் பொலிவை பெற்றிருந்தாலும், இந்த கார் பார்ப்பதற்கு பல மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை புதிய டிசைன்களுடன் பெற்றிருக்கிறது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

முக்கியமாக காரின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள அறுங்கோண வடிவிலான இதனுடைய க்ரில் அமைப்பு, பார்த்த உடனேயே 2017 ஸ்விஃப்ட் காரை ஸ்போர்ட்ஸ் மாடலாக நமக்கு காட்டி விடுகிறது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

மேலும் இந்த அறுங்கோண வடிவில், பெரிய காற்று உள்தட்டுகள், ஸ்பில்ட்டர் மற்றும் பம்பர்களும் இடம்பெற்றிருப்பது முகப்பு டிசைனில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

தற்போதைய மாடலில் இருக்கும் ஹெட்லேம்ப் அமைப்பு, அப்படியே இந்த புதிய மாடலிலும் உள்ளது. இது பழைய ஸ்விஃப்ட் காருடன், இந்த புதிய ஸ்விஃப்டிற்கு ஒரு இணக்கத்தை தருகிறது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இதே அமைப்புடன் முந்தைய பிளாக் ஸ்வேன் பம்ப் இந்த புதிய மாடலிலும் உள்ளது. மேலும் இதில் ஃபிளோடிங் ரூஃப் வைக்கும் அளவிற்கு 2017 ஸ்விஃப்ட் காரின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இந்த காரில் பின்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் விண்டுஸ்க்ரீன் மற்றும் சி-பில்லரில் உருவாக்கப்பட்ட பின்பக்க கதவு பிடிமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

ஸ்போர்ட்ஸ் தரத்திலான கட்டமைப்பை தான் இந்த புதிய காரின் உட்புறங்களிலும் இருக்கும் என முன்பே சுசுகி தெரிவித்துவிட்டது. அதன்படி தான் புதிய ஸ்விஃப்ட் காருக்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

வட்டவடிவனான ஹெசிஏசி கட்டுபாடுகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இதில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இவற்றுடன் ஹை ரெசல்யுஷன் உடன் கூடிய பல்வேறு தகவல்களை ஒருசேர தரும் ட்வின் பாட் ஸ்போடோ கண்சோல் உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட் காரின் சிறப்பான ஒன்று.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது பயன்பாட்டில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இதன் மூலம் பெட்ரோல் மாடல் ஸ்விஃப்ட் கார் 83.1 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

டீசல் எஞ்சின் ஸ்விஃப்ட் கார் மூலம் 73.9 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இந்த இரண்டு எஞ்சின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

இதேபோன்ற எஞ்சின் அமைப்பு புதிய ஸ்விஃப்ட் காரின் டீசல் மற்றும் பெட்ரோல் தேர்வுகளில் உள்ளன. ஆனால் முந்தைய மாடலை விட இந்த புதிய காரில் எரிவாயு சேமிப்பு திறன் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.

பழைய மாடல் ஸ்விஃப்ட் Vs புதிய மாடல் ஸ்விஃப்ட்..!!

காரணம் பழைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்விஃப்ட் கார் இலகுவான எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் எரிவாயு சிக்கினம் மற்றும் அதிக செயல்திறன் கூடுதலாகவே இருக்கும்.

English summary
Read in Tamil: A Compelte Study about new Swift VS Old Swift. Click for Details...
Story first published: Friday, September 29, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark