அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

Written By:

அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. நேற்று முன்தினம் முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அசல் ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய டிஜி லாக்கர் வசதி மூலமாக ஓட்டுனர் உரிமத்தை காட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

இந்த கேள்விக்கு காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அசல் ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக டிஜி லாக்கர் மூலமாக ஆவணத்தை காட்டுவதை ஏற்க முடியாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

டிஜி லாக்கர் என்பது அசல் சான்றுகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதற்கான மின்னணு பெட்டகமாகவே கருத முடியும். ஸ்மார்ட்போனில் இருக்கும் டிஜி லாக்கர் ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கான சட்ட வரையறைகள் மோட்டார் வாகனச் சட்டத்தில் இல்லை.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

மேலும், டிஜி லாக்கர் ஆவணங்களை சரிபார்க்கும் விசேஷ கருவிகள் காவல்துறையிடம் இல்லை. எனவே, அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருப்பது அவசியம் என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

டிஜி லாக்கர் என்பது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன். ஆனாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் டிஜி லாக்கர் ஆவணத்தை ஏற்றுக் கொள்வதற்கான விதி இல்லை என்பதால், அது பயனற்றதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

இந்த நிலையில், அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை கையில் பாதுகாப்பாக வைத்து செல்வதே பெரிய காரியமாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், டிஜி லாக்கர் மூலமாக ஆவணத்தை சரிபார்த்துக் கொள்வதற்கு அனுமதி வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

தமாகா தலைவர் ஜி.கே. வாசனும் டிஜி லாக்கர் மூலமாக வாகன ஓட்டுனர் உரிமத்தை ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசும், மத்திய போக்குவரத்துத் துறையும் இணைந்து உருவாக்கிய டிஜி லாக்கர் சிறந்த வசதியாக இருக்கும்.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

வாகன தணிக்கையின்போது டிஜி லாக்கர் ஆவணத்தை சோதனை நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தில் இதற்கான விதிமுறையையும் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அசல் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக டிஜி லாக்கர்: காவல்துறை விளக்கம்!

டிஜி லாக்கர் ஆவணத்தை காவல் துறை ஏற்க முடியாது என்று தெரிவித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Via- Vikatan

English summary
Dijilocker Application Can't Be Accept As A Original Driving Licence: TN Police.
Please Wait while comments are loading...

Latest Photos