”இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க இயலாது” நிதின் கட்கரி திட்டவட்டம்..!!

”இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க இயலாது” நிதின் கட்கரி திட்டவட்டம்..!!

By Azhagar

எந்த நிலையிலும் இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

உலகின் பெரும்பாலான வாகன தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தானியங்கி (ஓட்டுநரில்லா) வாகனங்களை தயாரிக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளன.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

தன்நிலை இயக்கம் பெற்ற வாகனங்கள் வாகன துறைக்கான அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

இந்த தொழில்நுட்பத்தை கார்கள் மட்டுமின்றி, விமானம், ஹெலிகாப்டர்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

இந்நிலையில் ஓட்டுநரில்லா வாகனங்களை இந்தியாவில் எந்த நிலையிலும் அனுமதிக்க இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

ஓட்டுநரில்லா தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமானால் அது வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி காரணம் கூறுகிறார்.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

இதனாலேயே ஓட்டுநரில்லா கார்கள் பயன்பாட்டை இந்தியாவில் அனுமதிக்க இயலாது. மேலும் கார் ஓட்டும் தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு இது ஆபத்தாக அமையும் என்பது அவரது கருத்தாக உள்ளது.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

நாடு முழுவதும் தற்போது 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகரீதியான ஓட்டுநர்கள் தேவையுள்ளது.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

அதனால் தேசியளவில் 5 ஆண்டுகளில் 100 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க, மத்திய அமைச்சரவை திட்டமிட்டு வருகிறது.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

இந்த திட்டம் சாத்தியமாக்கப்பட்டால், இந்தியளவில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற குறைந்தது 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

தானியங்கி வாகனங்களை தயாரிப்பதில் உலகளவில் மெர்சிடிஸ், வால்வோ, கூகுள் மற்று ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டு வருகின்றன.

ஓட்டுநரில்லா கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை..!!

வாகன துறையை பொறுத்தவரைக்கும் இந்தியா சர்வதேச மதிப்பில் மிகப்பெரிய சந்தை. அதனால் அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த நிலைபாட்டால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: India Will Not See Driverless Cars says Central Minister Nithin Gadkari. Click for the Details...
Story first published: Tuesday, July 25, 2017, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X