ஸ்விப்ஃட், ஆல்டோ, எர்டிகா மாருதி சுசுகியின் பிரபல கார்களுக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு..!!

Written By:

இந்தியாவில் விற்பனையில் முதன்மை பெறும் மாருதி சுசுகியின் கார்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி தயாரிப்புகள் தீபாவளிக்காக ரூ. 5000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி    விலை பெறுகின்றன. மேலும் இதனுடன் எக்ஸேஞ்ச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!

தீபாவளிக்கான சலுகை விற்பனை குறித்து மாருதி சுசுகி டீலர்களிடம் நாங்கள் நேரடியாக தகவல்களை சேகரித்தோம். அதன்படி மாநிலங்களுக்கு ஏற்றவாறு கார்களுக்கான சலுகை விலைகளில் மாறுபாடு இருக்கும் என்பது தெரியவந்தது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!

குறிப்பாக ஆல்டோ, ஸ்விஃப்ட், ஸ்விஃப்ட் டிசையர், செலிரியோ, வேகன் ஆர், எர்டிகா மற்றும் சியாஸ் போன்றமாருதி சுசுகியின் மாடல்கள் இந்த தீபாவளி தள்ளுபடி விலையின் கீழ் வருகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ 800 & ஆல்டோ கே10

மாருதி சுசுகி ஆல்டோ 800 & ஆல்டோ கே10

மாருதி 800-க்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்திற்கு இந்தியாவெங்கும் பெரிய விற்பனை திறனை தந்த மாடல் என்றால் அது ஆல்டோ கார்கள் தான்.

இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மாருதி ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 மாடல்களில் சலுகை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

மாருதி ஆல்டோ 800 கிட்டத்தட்ட ரூ.20,000 வரை இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடி பெறுகிறது. மேலும் இதற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளது.

அதனை தொடர்ந்து ஆல்டோ 800 போலவே , மாருதி ஆல்டோ கே10 காருக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

ஏஎம்டி பெற்ற ஆல்டோ கே10 காருக்கு தள்ளுபடி விலை ரூ.15,000 வரை உள்ளது. மேலும் அதற்கான எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.20,000 வரை உள்ளது.

மாருதி சுசுகி வேகன் ஆர்

மாருதி சுசுகி வேகன் ஆர்

வேகன் ஆர் கார் மாடலை மாருதி சுசுகி வெளியிட்டத்தில் இருந்து இதுவரை சுமார் 20 லட்சம் எர்டிகா கார்களை அந்நிறுவனம் இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

வேகன் ஆர் காருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய ஏஎம்டி வேரியண்டிற்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 விரை சலுகை விலை அமைந்துள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ

மாருதி சுசுகி செலிரியோ

வரும் தீபாவளிக்கு செலிரியோ ஹேட்ச்பேக் மாடல் கார் ரூ.30,000 வரை தள்ளுபடி பெறுகிறது. மேலும் இதற்கான எக்ஸேஞ்ச் ஆஃபர் ரூ.15,000 வரை உள்ளது.

தீபாவளிக்காக இதனுடைய ஏஎம்டி வேரியண்ட் ரூ.22,000 வரை தள்ளிபடி விலை பெறுவதாக மாருதி சுசுகிகான டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஸ்விஃப்ட் டிசையர்

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஸ்விஃப்ட் டிசையர்

இந்தியாவில் ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இதுவரை விற்பனை திறனை பெற்று வரும் மாடல் என்றால் அது மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார்.

வரும் தீபாவளிக்காக ஸ்விப்ஃட் காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் விலை ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

மாருதி ஸ்விஃப்ட் டீசல் மாடல் கார் ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை தள்ளுபடி விலை பெறுகிறது. இதற்கான எக்ஸ்சேஞ்ச் விலை ரூ.15,000 வரை உள்ளது.

கடந்த ஆக்ஸ்டு மாத கணக்கெடுப்பில் இந்தியாவில் அதிக விற்பனை திறன் பெற்ற மாடலாக அமைந்தது மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் டிசையர்.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

காம்பேக்ட் செடான் தேர்வுகளில் பலரின் விருப்பமாக இருக்கும் இந்த கார் பண்டிகை கால தள்ளுபடி ரூ.20,000 வரை உள்ளது.

மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகி எர்டிகா

இந்தியாவில் எம்.பி.வி ரக கார் விற்பனையில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் மாடல் மாருதி சுசுகி எர்டிகா. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

இந்த பண்டிகை காலத்தில் பெட்ரோல் மாடல் எர்டிகா கார் ரூ.5,000 வரை சலுகை விலை பெறுகிறது. ஆதேபோல இதற்கான எக்ஸ்சேஞ்ச் விலை ரூ.20,000 வரை உள்ளது.

எர்டிகா காரில் டீசல் வேரியண்ட் ரூ.30,000 வரை தீபாவளிக்கான சலுகை விலை பெறுகிறது. மற்றும் இதனுடைய எக்ஸ்சேஞ்ச் விலை ரூ.20,000.

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ்

கடந்த மார்ச் மாதம் முதல் , வழக்கமான டீலர்ஷிப்பில் இருந்து மாருதி சுசுகி சியாஸ் கார் ப்ரீமியம் அவுட்லேட் கார்கள் விற்பனை செய்யப்படும் நெக்ஸாவின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

நெக்ஸா அவுட்லெட்டிற்கு வந்த பிற்பாடு மாருதி சியாஸ் காருக்கான விற்பனை அதிகரித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு சியாஸ் காருக்கு மாருதி சுசுகி டீலர்கள் எந்தவித தள்ளுபடி விலைகளை அறிவிக்கவில்லை.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

ஆனால் டீசல் மாடல் சியாஸ் காருக்கு தள்ளுபடி விலை ரூ.40,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வாடிக்கையாளர்கள் தாரளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

மேலும் எக்ஸ்சேஞ்ச் தேவைக்காக பெட்ரோல் மாடல் காருக்கு ரூ.30,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் சியாஸ் மாடலுக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

மாருதி சுசுகியின் அதிக விற்பனை திறன் பெற்ற மாடல்கள் பல, இந்தாண்டு தீபாவளிக்கு சிறப்பான சலுகை விலைகளை பெற்றுள்ளன.

மாருதி சுசுகி கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி விலை அறிவிப்பு..!!

இதை பயன்படுத்திக்கொண்டு உங்களது தேர்வுகளுக்கு ஏற்றபடி மாருதி சுசுகி தயாரிப்புகளை வாங்க விரும்புபவர்களுக்கு இந்தாண்டு தீபாவளி என்றும் மறக்க முடியாத பொன்நாளாக இருக்கும்.

English summary
Read in Tamil: Maruti Suzuki has announced a host of discount offers and benefits this festive season. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark