மாருதி கார்களுக்கான தீபாவளி டிஸ்கவுன்ட் ஆஃபர்கள் விபரம்!

Written By:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இவ்வேளையில், கார் வாங்கும் திட்டம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அனேக வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் மாருதி கார்களுக்கு இப்போது வழங்கப்படும் டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி கார்களுக்கான தீபாவளி டிஸ்கவுன்ட் ஆஃபர்கள் விபரம்!

மாருதி கார்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.50,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர் இப்போது பெறும் வாய்ப்புள்ளது. இது பண்டிகை காலத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கும். எந்தெந்த காருக்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் கொடுக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் கே10

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் கே10

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் மாடல் ஆல்ட்டோ. இதில், ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.20,000 மதிப்பிலான சேமிப்பை பெற முடியும். ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.10,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் உள்ளன. இதுதவிர, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கும், முதல்முறை கார் வாங்குவோருக்கும் சிறந்த சாய்ஸாக விளங்கி வரும் மாருதி வேகன் ஆர் காருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 தள்ளுபடியையும், ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை எஎக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காருக்கு ரூ.30,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்புளளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.22,000 வரை சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 வரையிலான சேமிப்பையும், தங்க நாணயத்தை பெறும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் அளிக்கப்படுகிறது. மாருதி ஸ்விஃப்ட் டீசல் காருக்கு ரூ.22,000 வரையில் சேமிப்பையும், ரூ.15,000 மதிப்புக்கான எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அடுத்து எம்பிவி கார் ரகத்தில் விற்பனையில் இரண்டாவது இடம் வகிக்கும் மாடல் மாருதி எர்டிகா. பெட்ரோல் எர்டிகாவுக்கு ரூ.5,000 வரையில் சேமிப்புச் சலுகைகளையும், ரூ.20,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும். டீசல் மாடலுக்கு ரூ.30,000 வரை சேமிப்பையும், ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனசையும் பெற முடியும்.

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ்

ஹோண்டா சிட்டி மட்டுமின்றி, புதிய ஹூண்டாய் வெர்னா வரவால் சற்று நெருக்கடியை சந்தித்து வரும் மாருதி சியாஸ் காருக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கு விலையில் நேரடி தள்ளுபடி இல்லை. ஆனால், ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெற முடியும்.

 மாருதி கார்களுக்கான தீபாவளி டிஸ்கவுன்ட் ஆஃபர்கள் விபரம்!

இந்த சலுகை விபரங்கள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். எனவே, உங்கள் அருகாமையிலுள்ள மாருதி டீலரை தொடர்பு கொண்டு முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளவும்.

English summary
Maruti Suzuki, India's largest carmaker, has announced a host of discount offers and benefits this festive season. The Indo-Japanese company is offering discounts ranging from Rs 5,000 to Rs 50,000 along with exchange offers.
Story first published: Thursday, September 28, 2017, 11:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark