ஜிஎஸ்டி தாக்கத்தால் பயணிகள் ரக கார் விற்பனையில் வீழ்ச்சி !!!

ஜிஎஸ்டி தாக்கத்தால் பயணிகள் ரக கார் விற்பனையில் இந்தியா வீழ்ச்சி கண்டது..!!

By Azhagar

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஜூன் மாத வர்த்தக முடிவில் உள்ளூர் ரக கார் விற்பனை இந்தியாவில் 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

ஜூலை முதல் ஜிஎஸ்டி நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்பட தொடங்கியதால் இந்த வீழ்ச்சி நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

எனினும், உள்ளூர் ரக பயணிகள் கார் விற்பனை இந்தியாவில் 11.24 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது கடந்த 2016 ஜூனில் 154,237 எண்ணிகையிலான பயணிகள் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

இதோடு 2017 ஜூன் மாத விற்பனையை ஒப்பிடுகையில் மொத்தம் 136,895 பயணிகள் கார்களே விற்பனை ஆகியுள்ளன.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

கடந்த ஜூனில் எஸ்.யூ.வி ரக வாகனங்களும் 11.25 வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் இந்த பட்டியலில் கனரக வாகன விற்பனை 1.4 சதவீதம் கடந்தாண்டு ஜூனை விட இந்தாண்டில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

2017 ஜூன் மாதத்தில் மொத்தம் 56,890 கனரக வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

பயணிகள் ரக வாகனங்கள் 2017 ஜூனில் 1,98,399 அளவில் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் 2016 ஜூனில் சுமார் 2,23, 454 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

ஆனால் இதே நிலைமை இரு சக்கர வாகன விற்பனையில் இல்லை. பைக் விற்பனையை பொறுத்த வரை கடந்தாண்டை விட இந்தாண்டு ஜூன் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

2017 ஜூன் மாத முடிவு வரை கார் விற்பனையில் உச்சத்தை தொட்ட நிறுவனமாக மாருதி உள்ளது. அந்நிறுவனம் கடந்த மாதம் வரை சுமார் 93,263 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

இது மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஏறுமுகம் தான். காரணம் இதே நிதிநிலை ஆண்டில் 2016 ஜூன் வரை சரியாக 92,133 கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

மாருதி சுசுகியை தவிர டொயோட்டா, ஹூண்டாய் போன்ற இந்தியாவின் மற்ற முன்னணி பயணிகள் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த பிரிவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

ஜிஎஸ்டி காரணமாக வாடிக்கையாளர்கள் ஜூன் மாதம் வரை பொறுமை காத்திருந்தது மட்டுமே இதற்கு காரணம் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சார்ந்த சிலர் கூறுகின்றனர்.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

2017 ஜூனில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 1,973 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளன. அதேபோல 1,655 கார்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு டொயோட்டா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

ஆனால் 2016 ஜூனில் இந்தியாவில் அபார வளர்ச்சியை காட்டியது டொயோட்டா தான். 13,502 கார்களை அது 2016 இதே காலகட்டத்தில் விற்பனை செய்திருந்தது.

அதேபோல ஏற்றுமதி அளவை பொறுத்த வரை டொயோட்டா 1,352 கார்களை வெளிநாடுகளில் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

ஹோண்டா நிறுவனம் 2017 ஜூனில் சிறியளவில் முன்னேற்றத்தை பார்த்துள்ளது. கடந்த ஆண்டில் 11,407 கார்களை விற்பனை செய்த ஹோண்டா 2017 ஜூனில் 12,804 கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் வீழ்ச்சி நிலையில் பயணிகள் கார் விற்பனை..!!

இதன்மூலம் இந்தாண்டில் ஹோண்டா இந்தியாவில் பயணிகள் கார் விற்பனையில் 12.2 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது.

Most Read Articles
English summary
The domestic car sales in India dropped by 11.21 percent in June. Click for Details...
Story first published: Monday, July 10, 2017, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X