கார் சாவியில் ஷாப்பிங்கிற்கான கட்டணத்தை செலுத்தும் புதிய தொழில்நுட்பம்: டிஸ் நிறுவனம் அறிமுகம்..!!

Written By:

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ், தொடர்பற்ற நிலையில் கட்டணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் சாவிப் பிடியில் இந்த தொடர்பற்ற கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை சிக் என்ற மாடல் காரில் பொருத்தியுள்ளது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

தொடர்பற்ற ஏடிஎம் கார்டு போன்ற செயல்முறையின் கீழ் தான் டிஎஸ் தயாரித்துள்ள இந்த தொழில்நுட்பமும் இயங்கும்.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

சிக் காரின் சாவியானது வாடிக்கையாளரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதன்மூலம் இந்திய மதிப்பில் அந்த வாடிக்கையாளர் ரூ.2400 வரை ஒரு நாளில் செலவு செய்யலாம்.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

சிக் மாடல் காரில் கூடுதல் அம்சமாக வரும் இந்த சாவிப்பிடிக்கு டிஎஸ் நிறுவனம் கூடுதல் கட்டணம் எதையும் நிர்ணயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

பிபே என்ற செயலியை நமது ஸ்மாட்ஃபோனில் பதிவிறக்கம் செய்துவிட்டு, பிறகு இந்த சாவியின் மூலம் தொடர்பில்லா பணம் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

நீங்கள் பயன்படுத்தும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் ஒருவேளை பணமில்லை என்றாலும், இந்த பிபே செயலி உங்களுக்கு டாப்-அப் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

தற்போது மாறி வரும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு ஏற்றவாறான நடைமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

தற்போது அறிமுகமாகியுள்ள இந்த தொடர்பில்லா கட்டணம் பரிமாற்றம் மூலம், தொழில்நுட்பம் மற்றும் தோற்றத்தில் புதுமையை விரும்பக்கூடிய வாடிக்கையாளர்கள் தனக்கு கிடைப்பார்கள் என டிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

இதுகுறித்து பேசிய டிஸ் ஆட்டோமொபைல்ஸின் நிர்வாக இயக்குநர் மார் பிளண்டல்,

"வாடிக்கையாளர்களின் பரபரப்பான வாழ்க்கையில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கை சேர்க்கும். எளிய முறையில் பணம் செலுத்தும் இந்த தொடர்பு மேலும் வலுப்படுத்தப்படும்" என்று கூறினார்.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

தொடர்பில்லா கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை தாண்டி டிஎஸ் 3 கனெக்டெட் சிக் காரில் மிரர் லிங், ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 7-இஞ்ச் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

மேலும் இந்த மாடல் காரில் 17-இஞ்ச் அலாய் சக்கரங்கள், சாட்-நேவ் மற்றும் ஏசி தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களும் அடங்கியுள்ளது.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

டிஸ் 3 கனெக்டெட் சிக் காரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தொடர்பில்லா கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பம் ஷாப்பிங் செல்லும் போது மிகுந்த வசதியாக இருக்கு.

கார் சாவிப்பிடியில் புதிய தொழில்நுட்பம்: டிஸ் அறிமுகம்..!!

தற்போது இங்கிலாந்து நாட்டில் மட்டும் சிக் கார்களில் இந்த தொழில்நுட்பத்தை டிஎஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

பிஎஸ்ஏ குழுமத்தின் ப்ரீமியர் பிராண்ட் கார்கள் தான் டிஸ் ஆட்டோமொபைல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: French automaker DS Automobiles has introduced the contactless payment technology in the key fob. Click for Details...
Story first published: Sunday, September 3, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos