பெட்ரோல், டீசல் கார்களிலிருந்து மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்: இந்திய அரசு அதிரடி..!

Written By:

உலகளவில் எரிவாயு திறன்களை பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களுக்கு மின்சார கார்களை வாங்க முடிவு செய்துள்ளது.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலக்கரி,மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சரான பியூஷ் கோயல்,

"அரசாங்க துறைகளில் முதற்கட்டமாக மின்சார கார் பயன்பாடு கொண்டு வரப்படவுள்ளது. அதற்காக அமைச்சர்கள் பயன்பாட்டிற்காக 1000 மின்சார கார்கள் வாங்கப்படும்" என்று கூறினார்.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

இதற்காக டெண்டர் விடும் பணியை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எரிசக்தி சுத்திகரிப்பு சேவை நிறுவனத்திற்கு (EESL) வழங்கப்பட்டுள்ளாதக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Recommended Video
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

முதற்கட்டமாக தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார கார்களுக்கான 4000 பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்படவுள்ளன.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

மேலும் அரசு சார்பில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 10000 மின்சார கார்களை வாங்க உலகளாவிய அளவில் ஏலப் பணிகளை இ.இ.எஸ்.எல் மேற்கொள்ளும்.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

எரிசக்தி சுத்திகரிப்பு சேவை நிறுவனத்தால் வாங்கப்படும் மின்சார கார்கள் நான்கு கதவுகளை கொண்டதாக இருக்கும்.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 20- 150 கி.மீ செல்லும் திறன் பெற்றதாக இருக்கும் என இ.இ.எஸ்.எல் நிர்வாக இயக்குநர் சௌரவ்ப் குமார் கூறினார்.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

புது டெல்லி நகராட்சி கவுன்சில் மண்டலத்தில் கீழ் இருக்கும் அனைத்து அமைச்சரவை அலுவலங்கள் மற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 300 முதல் 400 மின்சார கார்கள் வாங்கப்படுகிறது.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

இதுகுறித்து அறிவிப்பையும் அரசு அலுவலங்களுக்கு சொல்லப்பட்டு விட்டதாக சௌரவ்ப் குமார் தெரிவித்தார்.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

மின்சார கார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பது சௌரவ்ப் குமார் கருத்தாக உள்ளது.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து ரக வாகனங்களும் மின்சார பயன்பாட்டிற்கு மாற்ற இந்தியா முயற்சித்து வருகிறது.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

அதற்கான முதற்படியாகவே தற்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் அறிவிப்புகள் தொடர்ந்து வருகின்றன.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

இதற்கிடையில் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா, இந்தியாவில் மின்சார கார்களுக்கான சந்தைய உருவாக்க தீவிரமாக தயாராகி வருகின்றன.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

மின்சார கார்கள் பயன்பாட்டினை இந்தியாவில் ஊக்குவிக்கும் முதல் படியை தன்னிடமிருந்து துவங்கியுள்ள அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

மின்சார கார்களுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்..!!

ஆனால் அதே சமயத்தில் வாகன தேவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை தரும் இந்த முயற்சியை சரியாக நிர்வாகிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலகர்கள் பலரின் விருப்பமாக உள்ளது

English summary
Read in Tamil: EESL Looking To Procure 10,000 Electric Cars For Various Ministries. Click for Details...
Story first published: Friday, August 18, 2017, 11:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos