டிசம்பர் 1 முதல் கார்களுக்கான சுங்க கட்டணம் செலுத்துவதில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

Written By:

போக்குவரத்திற்கான நியதிகளை சீர் செய்யும் பொருட்டு பல்வேறு முக்கிய மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

அதன்படி, கார்கள் உட்பட அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் ஃபாஸ்டேக் என்ற கருவியை பொருத்துவதற்கான செயல்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் கார்கள் உட்பட நான்கு சக்கர வாகனங்களுக்கான விண்டுஸ்க்ரீனில் ஃபாஸ்டேக்ஸ் கருவி இடம்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

இந்த நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் வாங்கப்படும் புதிய கார்களுக்கே பொருந்தும். தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

குறிப்பிட்ட வாகனங்களில் இந்த கருவியை கார் தயாரிக்கும் நிறுவனங்கள் அல்லது அதிகாரப்பூர்வமான டீலர்கள் பொருத்தியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

அரசின் டிஜிட்டல் டிரைவிங் முறையின் கீழ் வரும் ஃபாஸ்டேக் சேவை, புதிய கார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன் கார்களின் உரிமையாளர்கள் பொருத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

ஃபாஸ்டேக் என்பது ரேடியோ அதிர்வெண் விநியோக முறையில் இயங்கக்கூடிய சாதனம். இந்த தொழில்நுட்பத்தால் பணம் அல்லது ஏடிஎம் கார்டு இல்லாமல், சுங்கச்சாவடிகளில் வாகனத்திற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

Trending on Drivespark

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

கார் வரி ஏய்ப்பு புகாரில் அமலா பாலை தொடர்ந்து அடுத்து சிக்கிய மணிரத்னம் பட ஹீரோ..!!

ஓவர்டேக் செய்த டோனால்டு டிரம்ப் காரை முந்திச்சென்று 'பீப்' சமிஞ்ஞை காட்டிய மர்ம பெண்..!!

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

ஃபாஸ்டேக்கில் தேவைக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து கொண்டு, அதை பயணங்களின் போது பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அதில் இருக்கும் வைப்பு நிதி பற்றிய தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கான செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்க மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முயன்று வருகிறது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஃபாஸ்டேக் சர்வீஸ் தேசியளவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதற்கான பணிகளில் மத்திய அரசு விரைவு காட்டி வருகிறது

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

தற்போது இந்தியளவில் சுமார் 240 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

கார்கள் சுங்க கட்டணம் செலுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

இது தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதற்கான செயல்பாடுகளில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
போக்குவரத்திற்கான நியதிகளை சீர் செய்யும் பொருட்டு பல்வேறு முக்கிய மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
Please Wait while comments are loading...

Latest Photos