ஒரு காருக்கு ரூ.58 லட்சம் லாபம் - மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனம்!

ஃபெராரி, போர்ஷே நிறுவனங்களின் லாபம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

உலகில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் ஃபெராரி, போர்ஷே, மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு காருக்கு அடையும் லாபங்களை அறிந்தால் உங்களுக்கு மலைப்பு ஏற்படலாம்.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

நிதி ஆண்டின் நிறைவுத்தருவாயில் கார் நிறுவனங்கள் ஈட்டியுள்ள வருவாய் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் ஒவ்வொரு காருக்கும் அந்நிறுவனங்கள் பெரும் லாபம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொருத்தவரையில் 2015ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு போட்டிநிறைந்த ஆண்டாக இருந்தது. எனினும் 2016ம் ஆண்டு லாபகரமான ஆண்டாக ஃபோக்ஸ்வேகனுக்கு அமைந்துள்ளது

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

இந்த லாபத்தில் பெரும் பங்கை அதன் பிராண்டுகளில் ஒன்றான ‘போர்ஷே' மூலமே பெற்றுள்ளது ஃபோக்ஸ்வேகன். கடந்த ஆண்டில் மட்டும் 2,38,000 கார்களை விற்றுள்ளது ஃபோர்ஷே.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

கடந்த ஆண்டில் போர்ஷே நிறுவனம் 2,38,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் செயல்பாட்டு லாபம் 4.1 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 26,000 கோடி ரூபாய் ஆகும். 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14% லாபம் உயர்ந்துள்ளது.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

இந்த கணக்குப்படி பார்த்தால் போர்ஷே நிறுவனம் கார் ஒன்றிற்கு தோராயமாக 17,250 டாலர்களை லாபம் ஈட்ட்டியுள்ளது. இந்திய மதிப்பில் 12 லட்ச ரூபாய் ஆகும். இதன் மூலம் டேய்ம்லரின் பிஎம்டபிள்யூ பிராண்டை விட ஃபோர்ஷே நிறுவனம் அதிகம் லாபம் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் கார் ஒன்றிற்கு 3.26 லட்ச ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

போர்ஷே நிறுவனம் கார்களின் எண்ணிக்கையின் மூலமே அதிக லாபம் அடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதன் தயாரிப்பு அளவை 47% உயர்த்தியுள்ளது அந்நிறுவனம். பிஎம்டபிள்யூவை விட 10 மடங்கு அதிக உற்பத்தி திறனை பெற்றுள்ளது போர்ஷே.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

போர்ஷேயின் வருமானம் உங்களை மலைக்க வைக்கிறது என்றால் ஸ்போர்ட்ஸ் கார்களின் அரசனாக விளங்கும் ஃபெராரி நிறுவனத்தின் வருமானம் உங்களை திகைக்க வைத்துவிடும்.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

ஃபெராரி நிறுவனம் கார் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 90,000 டாலர்களை லாபம் ஈட்டுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 58 லட்ச ரூபாயாகும். ஆயினும் பெராரி நிறுவனம் வருடத்திற்கு வெறும் 8,000 கார்களையே விற்பனை செய்கிறது.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

2,38,000 எண்ணிக்கையிலான கார்களை விற்று அதில் கார் ஒன்றிற்கு 12 லட்ச ரூபாயை லாபம் பார்க்கும் போர்ஷே நிறுவனத்தை விட 8,000 கார்களை விற்கும் ஃபெராரி நிறுவனம் கார் ஒன்றின் மூலம் 58 லட்ச ரூபாய் என 5 மடங்கு அதிகமாக லாபம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

மலைக்க வைக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லாபம்!

இது மட்டுமல்லாமல் ஃபெராரி நிறுவனத்தின் லாபத்தில் 30% வருமானம் ஆக்ஸஸரிகள், இஞ்சின்கள் மற்றும் கேளிக்கை பூங்கா முதலியவற்றில் இருந்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2017, 11:29 [IST]
English summary
Porsche's operating profits per car is $17,250 (approx. Rs 12 lakh), while Ferrari makes $90,000 (approx. Rs 58 lakh).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+