மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

மழை வெள்ளத்திலிருந்தது காரை பாதுகாக்கும் ப்ளட் கார்டு கவர் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பலராலும் மறக்க முடியாது. குறிப்பாக, கார், பைக் வைத்திருந்தவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். ஆசை ஆசையாய் வாங்கி கார் மற்றும் பைக்குகளை வெள்ள நீர் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

வெள்ள நீரில் ஆயிரக்கணக்கான கார், பைக்குகள் மூழ்கின. இதனால், கார், பைக்குகளை சில ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுத்து சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் பெரு மழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர் கவலையடைந்துள்ளனர். பலர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கார், பைக்குகளை நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

இதுபோன்ற சூழல்களில் இருந்து வெள்ள நீரிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கு ஏதாவது விசேஷ கவர் கிடைக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பால் டீலா என்பவர் இதுபோன்ற விசேஷ கார் கவர் ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் நாடு. அப்போது கார் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பது உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. இதனை மனதில் வைத்து, இந்த கார் கவரை உருவாக்கி இருக்கிறார்.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

Flood Guard என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கார் கவரை போட்டு வைத்துவிட்டால், மழை வெள்ளம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், இந்த கவரை போட்டுவதற்கு கூடுதலாக இரண்டு பேர் தேவைப்படுவர்.

Trending On DriveSpark Tamil:

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

தரையில் இந்த கவரை விரித்து வைத்து, அதில் மேல்பகுதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு காரை உள்ளே நிறுத்திவிட வேண்டும். பின்னர்,நான்கு முனைகளையும் காரின் மேல்புறத்தில் சேர்த்து அதற்கென கொடுக்கப்பட்டு இருக்கும் பெல்ட்டுகள் மூலமாக இறுக கட்டிவிடலாம்.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

மேலும், வெள்ள நீரில் கார் மிதந்து வேறு பகுதிக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக, இந்த கார் கவரில் இருக்கும் பெல்ட் ஒன்றை அருகில் உள்ள தூண் அல்லது ஜன்னல் பகுதியில் கட்டி விடலாம். இந்த கவரை போட்ட பிறகு, மழை வெள்ள நீர் மூலமாக கார் சேதமாவதை 100 சதவீதம் தடுக்கலாம் என்கிறார் பால் டீலா.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

இந்த கார் கவரை சோதனை அடிப்படையில் தயாரித்து விற்பனை செய்தார். வரவேற்பு கூட தற்போது https://www.floodguardph.com/ என்ற இணையதளத்தை துவங்கி, விற்பனை செய்து வருகிறார். காரின் வடிவத்திற்கு தக்கவாறான அளவுகளில் ப்ளட் கார்டு கவர்கள் கிடைக்கின்றன.

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்!

ஹோண்டா சிட்டி, சிவிக், டொயோட்டா ஆல்டிஸ் போன்ற கார்களுக்கான ஃப்ளட் கார்டு கவர்கள் இந்தியாவில் ரூ.15,122 விலையில் கிடைக்கிறது. மேலும், விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளம் மூலமாக கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஃப்ளட் கார்டு கார் கவரை எவ்வாறு போடுவது என்பதை செயல்முறை விளக்கமாக இந்த வீடியோவில் செய்து காட்டியுள்ளனர். எனினும், ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவதால், விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Flood Guard Car Cover Details.
Story first published: Friday, November 3, 2017, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X