புதிய தொழில்நுட்பம் கொண்ட ஃபோர்டு கார்கள் உங்களை மகிழ்விக்கப் போகிறது!
உங்கள் மனநிலையை அறிந்துகொண்டு செயல்படும் வகையிலான கார்களை ஃபோர்டு நிறுவனம் உருவாக்க உள்ளது . அது குறித்த தகவல்களை காணலாம்.
எந்த மாதிரியான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படும் வகையிலான தொழில்நுட்பம் கொண்ட கார்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான 'ஃபோர்டு'.

‘பேசியல் ரெகங்னைசிங்' என்ற மென்பொருளை இதற்காக உருவாக்கும் முயற்சியில் ஃபோர்டு நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. பேசியல் ரெகங்னைசிங் என்பது உங்களது மனநிலையை தெரிந்துகொண்டு செயல்படும் வகையிலான தொழில்நுட்பமாகும்.

எப்படி செயல்படும்?
இந்த வருங்கால தொழில்நுட்பமானது கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்களின் உதவியோடு உங்கள் முகபாவங்கள் மற்றும் குரல் தன்மையை புரிந்து கொள்கிறது, நீங்கள் வருத்தமான அல்லது கோபமான மனநிலையில் இருக்கிறீர்களா என்பதனையும் அறிந்துகொள்கிறது.

ஒருவேளை நீங்கள் வருத்தமான மனநிலையில் இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலை ஒலிக்கச்செய்து உங்களை மனநிலையை மாற்றி மகிழ்விக்கச் செய்யப்போகிறது இந்த தொழில்நுட்பம் கொண்ட கார்.

நம் சோக மனநிலையை புரிந்து கொண்டு, நமக்குப்பிடித்த பாடல்களை ஒலிக்கச்செய்வது மட்டுமல்லாமல் காரின் உட்புற வெளிச்சத்தையும் நம் எண்ணப்படியான நிறத்தில் ஒளிரச் செய்யப்போகிறது இந்த புதிய தொழில்நுட்பம்.

இத்தொழில்நுட்பம் பற்றி யார்க் பல்கலைக்கழகத்தின், மொழியியல் அறிவியல் துறை மூத்த பேராசிரியர் டோம்னிக் வார் கூறியபோது, "இக்காலத்தில் பலரும் தங்களது காரினை நேசிக்கின்றனர், ஆனால் உங்களை புரிந்து கொண்டு நிலைமைக்கு தக்கபடி செயல்படும் வகையில் கார்களில் தொழில்நுட்பம் வரும்போது கார்களுடனான பந்தம் மேலும் வலுப்பெரும்" என்றார்.

விரைவிலேயே கார்களுடன் உரையாடும் அளவிற்கு நாம் மாறப்போகிறோம், அப்போது ஒரு இயந்திரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோமே என்ற உணர்வு கூட மறத்துப்போகும் என்றும், வெகுவிரைவிலேயே நமது உதவியாராகவும், பயண துணையாகவும், நண்பனாகவும் கார்கள் இருக்கப்போகிறது என டோம்னிக் மேலும் கூறினார்.

வாய்ஸ் ரெகக்னைசன் தொழில்நுட்பத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து கார்களிலும் பொருத்தப்படும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனம் தனது ‘மொபிலிட்டி மற்றும் கனெக்டிவிட்டி' பிரிவில் கண்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பார்சிலோனாவில் நடக்க இருக்கும் ‘மொபைல் டெக் காங்கிரஸ்' என்ற தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வில் வெளிப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ஃபோர்டு எண்டேவர் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








