ரூ.1 லட்சம் வரை ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காருக்கு தள்ளுபடி விலை அறிவிப்பு..!!
ரூ.1 லட்சம் வரை ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காருக்கு தள்ளுபடி விலை அறிவிப்பு..!!
ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் காரின் விலை ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வலம் வரும் பிரபல சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக உள்ளது ஈகோஸ்போர்ட் கார்.

இதன் புதிய எடிசன் நவம்பர் 9ம் தேதி வருகிறது. இந்தியாவில் இதை விநியோகம் செய்யும் பணிகள் ஏற்கனவே நடந்துக்கொண்டுள்ளன.

புதிய எடிசன் ஈகோஸ்போர்ட் வெளிவருவதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


அதன்படி, ஃப்ரீ ஃபேஸ்லிஃப்ட் ஈகோஸ்போர்ட் மாடல் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்படுவதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

விலை குறைப்பு மட்டுமில்லாமல், சலுகைகள், சிறப்பு இஎம்ஐ வசதிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் போன்றவை தற்போதைய மாடல் ஈகோஸ்போர்ட் காருக்கு வழங்கப்படுகிறது.

இந்தியளவில் ஸ்டாக்கில் இருக்கும் ஈகோஸ்போர்ட் காருக்கு மட்டுமே இந்த தள்ளுபடி மற்றும் ஆஃபர்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் விற்பனையில் இருக்கும் ஈகோஸ்போர்ட் மாடல் தற்சயம் ரூ. 7.31 லட்சம் (டெல்லி, எக்ஸ்ஷோரூம்) விலையில் துவங்கி ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆகிறது.

2013ல் வெளியான ஈகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் நல்ல விற்பனையை எட்டி, கடந்த செப்டம்பரில் அதிக விற்பனை திறனை பெற்ற மாடலாக உள்ளது.

2017 ஈகோஸ்போர்ட் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டின் பிரத்யேக சின்க் 3 மென்பொருள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூஸ் கண்ட்ரோல், வேக கட்டுபாட்டு கருவி, பின்புற கேமரா மற்றும் தானியங்கி கிளைமேட்டிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை 2017 ஈகோஸ்போட் காரில் உள்ளன.

புதிய எடிசன் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரை வாங்க விரும்பவர்கள் ரூ. 30,000 முன்பணம் செலுத்த வேண்டும்.
இதற்கான முன்பதிவுகள் நாட்டின் அனைத்து ஃபோர்டு விற்பானையாளர்களிடமும் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








