இயற்கை வழிமுறையை பேணும் ஃபோர்டு: முதல் முயற்சியாக தயாராகும் மூங்கில் கார்

Written By:

இயற்கையாக உருவாகக்கூடிய பொருட்களில் மிக தடிமண் கொண்டவற்றில் ஒன்றான மூங்கிலில் ஃபோர்டு நிறுவனம் கார் தயாரிக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காரின் உள்கட்டமைப்புகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தவும் அதற்கான வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

சீனாவின் மக்கள் தேவைகளில் மூங்கிலின் பயன்பாடு தலை முதல் கால் வரை இருக்கும். மூங்கில் கிட்டத்தட்ட சீனா நாட்டினரின் காலச்சார அடையாளம். இதை வைத்து கார் தயாரிப்பது சீனாவின் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் என ஃபோர்டு நிறுவனம் எண்ணுகிறது.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு நிறுவனத்தின் சீனக்கிளை நான்ஜிங் என்ற பகுதியில் இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் பொருட்களுக்கான மேற்பார்வையாளர் ஜேனட் யின், மூங்கிலில் ஃபோர்டு கார் தயாரிப்பதை குறித்து உறுதியான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

பொறியாளர் ஜேனட் யின் வெளியிட்டுள்ள தகவலின்படி, "மூங்கில் என்பது மிகவும் உறுதியான அதே சமயத்தில் வளையும் தன்மை கொண்டது, மேலும் மூங்கிலை மறுசுழற்சி செய்துகொள்ளவும் முடியும். மேலும் சீனாவில் எளிதாக கிடைக்கூடிய வகையிலும் மூங்கில் உற்பத்தி உள்ளது" என ஜேனட்யின் தெரிவித்துள்ளார்.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

முழுதான ஒரு மூங்கில் காரை ஃபோர்டு வடிவமைப்பது இதுதான் முதல்முறை என்றாலும். மூங்கிலை அந்நிறுவனம் பலவாராக பயன்படுத்தும் முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. தனது தயாரிப்புகளின் உள்கட்டமைப்புகளில் மூங்கில் பயன்படுத்த வேண்டும் என்பது ஃபோர்டு நிறுவனத்தின் பல ஆண்டுகால திட்டம்.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

மூங்கிலை கார்களில் பயன்படுத்த ஃபோர்டு நிறுவனம் நியமித்த குழுவினர் பல ஆச்சர்யமான விஷயங்களை கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான ஸிந்தட்டிக் பொருட்களை விட மூங்கிலுக்கு நல்ல வலிமையான திறன் உள்ளதாக அக்குழுவினர் ஆராய்ந்து தெரிந்துக்கொண்டுள்ளனர்.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

மேலும் மூங்கில் மற்றும் ஸிந்தடிக் கலந்து உருவாக்கப்பட்டால், அந்த பொருள் கிட்டத்தட்ட 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும் என்பதும் அக்குழுவினர் கண்டுபிடித்த முக்கியமான பதிவு.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

மூங்கிலை கார்களில் பயன்படுத்துவது அல்லது முற்றிலும் மூங்கிலாலன காரை உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சிகளை சீனாவின் ஃபோர்டு நிறுவனம் ஜேஸ் க்யூயெர்வொ என்பவருடன் இணைந்து செய்து வருகிறது. இதன்மூலம் பயோபிளாஸ்டிக் சாதனங்களை காரில் பயன்படுத்தும் முறையும் அவருடன் சேர்ந்து ஃபோர்டு மேற்கொண்டு வருகிறது.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

கிடைக்கூடிய நிலையான பொருட்களை வைத்து வாகனங்களை தயாரிப்பதில் ஃபோர்டு தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளது. அந்தவகையில் அந்நிறுவனம் ஏற்கனவே கெனாஃப் எனக்கூடிய மரத்தை வைத்து ஃபோர்டு எஸ்கேப் காரின் கதவுகளை தயாரித்துள்ளது.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

மேலும், ரைஸ் ஹல்ஸ் மரத்தின் மூலம் ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்-150 ரக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கோதுமை கழிவுகளை வைத்து ஃபோர்டு ஃபிளக்ஸ் காரின் சில பாகங்களை தயாரித்துள்ளது.

மூங்கிலில் கார் தயாரிக்கும் ஃபோர்டு நிறுவனம்

சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நாம் இங்கு எஞ்சினை மாற்ற முயற்சித்துக்கொண்டு இருக்க, சீனாவில் ஃபோர்டு இயற்கை வழியிலான சாலை பயணத்திற்காக மாற்று வழிகளை உருவாக்கி வருகிறது. இந்த வழிமுறைகள் வெற்றிபெறுமானால் ஆட்டோமொபைல் உலகில் நிச்சயம் ஃபோர்டு புதிய டிரெண்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Ford Motor company is going to use one of the world’s strongest natural materials Bamboo to build vehicles. click for the details...
Story first published: Wednesday, April 19, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark