இந்தியாவில் கார் விற்பனை 85 சதவீதம் வரை வீழ்ச்சி: காரணம் ஜி.எஸ்.டி-யா..??
இந்தியாவில் கார் விற்பனை 85 சதவீதம் வரை வீழ்ச்சி: காரணம் ஜி.எஸ்.டி-யா..??
ஜிஎஸ்டி காரணமாக பெரும்பாலான வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது. ஆனால் அவை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபமாக அமையவில்லை.

ஜிஎஸ்டி-க்கு பிறகு வாகனங்களை வாங்கலாம் என வாடிக்கையாளர்கள் மே மாதம் தொடக்கத்திலே முடிவு எடுத்துவிட்டார்கள்.
அதனால் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்திற்கான கணக்கு முடிவில் கனிசமான நஷ்டத்தை சந்தித்துள்ளன.

மாருதி சுசுகியை பொறுத்தவரை ஜூன் மாத முடிவு கடந்த ஆண்டை விட 7 சதவீத லாப அளவை தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் மாருதி சுசுகியை தவிர மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல ஜூன் மாதத்தில் நஷ்டத்தையே சந்தித்துள்ளன.

மாருதி சுசுகி தான் வெற்றியாளராக இருந்தாலும், ஜூன் மாதத்தில் அது விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கை மே மாதத்தை விட குறைவு தான்.

விட்டாரா பிரஸ்ஸா கார் அந்நிறுவனத்திற்கு கடந்த மாதத்தில் நல்ல லாபத்தை அளித்துள்ளது. யுட்டிலிட்டி வாகனங்களுக்கான விற்பனை கடந்த ஆண்டை விட மாருதிக்கு 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் மொத்தம் 37,650 கார்களை விற்றுள்ளது. ஆனால் இது 2016ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 3 சதவீதம் குறைவு தான்.
ஆனால் ஹூண்டாய் நிறுவனம் மே மாதம் செய்த வர்த்தக முடிவின் படி ஜூன் மாதத்தில் அதனுடைய விற்பனை திறன் 10 சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும், நடைபெற்று முடிந்த காலாண்டு மதிப்புப்படி, ஹூண்டாய் நிறுவனம் 4.1 சதவீத வளர்ச்சியை இந்தாண்டில் அடைந்துள்ளதாக சந்தை மற்றும் விற்பனை அதிகாரி ராகேஷ் ஸ்ரீவதஸ்வா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி மாற்றத்தால் ஜூன் மாத முடிவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சரியான வளர்ச்சியே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில் ஜிஎஸ்டி அமலாகத்திற்கு முன்பு வரை, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா போன்ற கார்கள் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சூப்பர் ஃபெபார்மராக இருந்துள்ளன.

ஃபோர்டு நிறுவனத்தின் நிலைமை தான் மிக மோசமாக இந்த பட்டியலில் உள்ளது. ஜூனில் ஃபோர்டு மொத்தம் 6,149 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இதன்மூலம் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது 2017 ஜூன் மாதத்தில் ஃபோர்டு கார் 35 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவை தாண்டி வெளிநாட்டு விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் உள்ளூர் விற்பனை பிரிவில் 3 சதவீத வீழ்ச்சியை கடந்த ஜூன் மாதத்தில் மஹிந்திராவிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் வணிக வாகனங்களில் விற்பனையில் மஹிந்திராவிற்கு ஜூன் மாதம் ஏறுமுகமாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் வணிக வாகன விற்பனையில் மஹிந்திரா 12 சதவீத விற்பனையை அதிகமாக பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு, ஜூன் மாத கணக்கு முடிவில் டாடா நிறுவனமும் இறங்கு முகத்தை தான் சந்தித்துள்ளது.
டாடாவின் தயாரிப்புகள் ஜூன் மாதத்தில் 40,358 அளவில் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. ஆனால் பிஎஸ் 4 அமலாக்கத்தற்கு பிறகு வணிக வாகன விற்பனை உயர்ந்து வருவதாகவும்,

ஜிஎஸ்டி-னால் ஏற்பட்ட வாடிக்கையாளர்களின் மனக்குழப்பம் ஜூன் மாத விற்பனைய பாதித்துள்ளதாகவும். இதனால் பயணிகள் வாகனங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் டாடா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஜூன் மாத கணக்கு முடிவில் அதிக நஷ்டத்தை சம்பாதித்து இருப்பது டொயோட்டா நிறுவனம் தான். கிட்டத்தட்ட கடந்த மாதத்தில் 85 சதவீத விற்பனை வீழ்ச்சி டொயோட்டாவிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் டொயோட்டா நிறுவனம் மொத்தம் 1,973 கார்களை மட்டுமே கடந்த ஜூனில் விற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜிஎஸ்டி தாக்கத்திற்கு பிறகு இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ள படி, டொயோட்டா நிறுவனத்தின் எஸ்.யூ.விகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








