விரைவில் பெட்ரோல், டீசல் உற்பத்தியை நிறுத்துப்போவதாக ஃபிரான்ஸ் அறிவிப்பு... என்ன ஆச்சு..??
விரைவில் பெட்ரோல், டீசல் உற்பத்தியை நிறுத்துப்போவதாக ஃபிரான்ஸ் அறிவிப்பு... என்ன ஆச்சு..??
எரிபொருள் சாரா வாகன பயன்பாட்டிற்கு உலகமே முன்னேறி கொண்டு இருந்தாலும், அதை சாத்தியப்படுவது அவ்வளவு எளிதான காரியமில்லை.

இந்நிலையில் உலகிலேயே முதல் நாடாக எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் தொடர்பான தயாரிப்புகளை ஃபிரான்ஸ் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான சட்ட முன்வரவுகளை, அந்நாட்டின் பாராளுமன்றமும் அங்கிரீத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிபொருள் உற்பத்தியை நிறுத்திவிட்ட பிறகு, ஃபிரான்ஸ் நாட்டு அதற்குரிய திறன்களை ஏற்றுமதியின் மூலம் பெறும்.

உற்பத்தியின் மூலம் கிடைக்கும் உலகளவிலான எரிவாயுவிற்கான ஹைட்ரோகார்பன் தேவைகளில் ஃபிரான்ஸ் நாடு வெறும் ஒரு சதவீத பங்கு மட்டுமே அளித்து வருகிறது.
Recommended Video


அதையும் தனது உள்நாட்டு தேவைகளுக்காக பயன்படுத்திகிறது ஃபிரான்ஸ். இதன் காரணமாக தற்போது மொத்த எரிவாயு தேவைகளையும் இறக்குமதி மூலம் பெற முடிவு எடுத்துள்ளது.

கடந்த மே மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார் என்பது குற்பிட்டத்தக்கது.

புதைபடிவ எரிபொருட்களில் இருந்து கிடைக்கப்பெறும் பொருளாதாரத்தை கவரவும், பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஒரு பெரிய திட்டத்தின் சிறிய பகுதியாகவே ஃபிரான்ஸின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications