Subscribe to DriveSpark

டாடா நெக்ஸான் கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

Written By:

டாடா நிறுவனம் வெளியிடும் முதல் காம்பாக்ஸ் எஸ்யூவி கார் நெக்ஸான். நடந்துவரும் ஜெனிவா வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இக்கார் பற்றிய முழுமையான தகவல்களின் தொகுப்பை விரிவாக காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

2016 ஆட்டோ கண்காட்சியில் இதன் கான்செப்டை முதல் முறையாக அறிமுகப்படுத்தியபோதே இக்கார்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தொடங்கியது. டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் கொண்டு இந்த நெக்ஸா காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நெக்ஸான் கார் வெகுவான பார்வையாளர்களை ஈர்த்தது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

சாலையில் செல்வோரை திரும்பிப்பார்க்கும் வகையில், டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது, ஏரோடைனமிக் டிசைனில் ஃபிரண்ட் பில்லர்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லர்கள் இதில் உள்ளன.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

இதில் 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஃப்லோட்டிங் ரூஃப் ரெயில்கள், முகப்பு கிரில், பகல் நேர விளக்குகளுடன் கூடிய எல்ஈடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின்புற எல்ஈடி விளக்குகள் ஆகியவை காரின் வெளிப்புற தோற்றத்தை கவர்ச்சிகரமாக்குகின்றன.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

மாருதியின் விட்டாரா பிரேஸ்ஸா மற்றும் இக்னிஸ் கார்களும் டூடல் டோன் பெயிண்டிங் உள்ளதால் அவற்றுடன் போட்டியிடும் வகையில் நெக்ஸான் காரும் டூயல் டோன் கலர் ஸ்கீமில் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

வெளிப்புறம் மட்டுமல்லாது நெக்ஸான் காரின் உட்புறத்தையும் சிரத்தையுடன் வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இதன் டேஷ்போர்ட், ஸ்டீரிங் வீல், உட்பட உட்புறத்தின் பல இடங்களிலும் பிரீமியம் பொருட்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

மேலும், பயணிகளின் சவுகரியத்திற்காக கப் ஹோல்டர்கள், மல்டி யுடிலிட்டி ஸ்பேஸ், ஹேண்ட் பேக் ஹேங்கர்கள், லேப்டாப் ட்ரே ஆகிய பல்வேறு அம்சங்களை சேர்த்து இதை ஒரு பிரிமியம் காரில் உள்ளதை போன்று வடிவமைத்துள்ளனர்.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

நெக்ஸான் காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்கள், அட்வான்ஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. கஸ்டமைசேஷன் ஆப்ஷனையும் டாடா நிறுவனம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நெக்ஸான் கார் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பாதுகாப்பான டிரைவிங்குக்காக கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோலுடன் கூடிய ஈபிடி சிஸ்டம். மேலும் ரியர் வியூ கேமரா இண்டர்பேஃசும் இதில் அளிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய டாடா நெக்ஸான் காரில் 1.5 லிட்டர் ரிவோடார்க் டீசல் இஞ்சின் உள்ளது. இந்தியாவில் உள்ள கார்களில், இந்த இஞ்சின் வேறு எந்த காரிலும் கிடையாது. இது சிறந்த மைலேஜையும், ஆற்றலையும் ஒருங்கே தரவல்லது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் உள்ளது. பெட்ரோல் இஞ்சின் குறித்து இதுவரை தெளிவாக தகவல் இல்லை.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

நெக்ஸான் காரின் இந்திய அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாடா நிறுவனம் வெளியிடவில்லை. ஆயினும் இது இந்த ஆண்டின் இறுதியில் அல்லது தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது.

டாடா நெக்ஸான் கார் பற்றிய முழு விவரங்கள்

புதிய நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவி கார் 7 லட்சம் முதல் 9 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நெக்ஸான் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் போது அவை ஃபோர்டு இகோ ஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரேஸ்ஸா மற்றும் மஹிந்திரா டியுவி300 மாடல்களுக்கு கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டியாகோ காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணுங்கள்: 

English summary
Tata Motors showcases the Nexon at Geneva Motor Show 2017
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark