மின்சார டிரக்குகள்... மின்சார நெடுஞ்சாலைகள்... மலைக்க வைக்கும் ஜெர்மனியின் அதிரடி திட்டங்கள்..!!

Written By:

மின்சார வாகனங்களுக்கு, மின்சார ஆற்றலை வழங்கும் நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணியில் பிரபல சீமன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

தொலைதூர மற்றும் கனரக பயணங்களுக்கான வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

விரைவிலேயே டெஸ்லா, மின்சாரம் மற்றும் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை ஒருங்கே பெற்ற செமி ரக டிரக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

டெஸ்லா தயாரிக்கும் இந்த மின்சார செமி ரக டிரக்குகளுக்கு சார்ஜ் செய்வதில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது. அதை தற்போது சீமன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

அதாவது டிரக்குகள் சாலையில் இயக்கத்தில் இருக்கும்போதே, சாலை மூலம் பேட்டரிகளை மேலும் சார்ஜ் செய்து கொள்ளும் வடிவில் சீமன்ஸின் தொழில்நுட்பம் அமையவுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

இதற்காக மின்சார ஆற்றலை வாகன பேட்டரிகளுக்கு அளிக்கும் வகையிலான நெடுஞ்சாலைகளை ஜெர்மனி நாட்டில் அமைக்க சீமன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

இ-ஹைவே என்ற பெயரில் இதற்கான கட்டமைப்பு பணிகள் ஜெர்மனியில் தொடங்கப்படவுள்ளது. விரைவில்10 கி.மீ தொலைவில் இ-ஹைவே சாலைகள் அமைக்கப்பட்டு சோதனைகளும் தொடங்கவுள்ளன.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

ஜெர்மனிக்கு முன்னதாக இதே மின்சார சாலை கட்டமைப்பு ஸ்வீடனில் 2.கீமீ தொலைவிற்கு சோதித்து பார்க்கப்பட்டது. அது வெற்றியை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

ஸ்வீடனில் சோதனை செய்யப்பட்ட பகுதிகளில் காற்று மாசு குறைபாடு 50 சதவீதம் நீங்கியதையும் இதன் வாயிலாக உணர்ந்ததாக கூறப்பட்டது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

மின்சார சாலைகளின் பயன்பாட்டை அதிகரிக்க, ஜெர்மனியில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல, ஹைஃபிரிட் மற்றும் மின்சார கார் தயாரிப்புகளில் தொடர்ந்து ஈடுபடும்

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதி நவீன செயல்திறன் போன்றவை மின்சார வாகன தயாரிப்பில் உருவாக்கப்படும். இதற்காக ஜெர்மனி அரசும் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

ஜெர்மனி உட்பட பல ஐரோப்பா நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, அப்படியே இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் நடைமுறைக்கு வரும்.

மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டமைப்பை உருவாக்கும் ஜெர்மனி!

மின்சார ஆற்றல் கொண்டு வாகனங்களின் பேட்டரிகள் சார்ஜ் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தால்,

கனரக வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு, பெருமளவு குறையும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Read in Tamil: Germany is on the board to get an Electrified Highway For Trucks. Click for Details...
Story first published: Monday, September 25, 2017, 11:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark