இனி மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு அரசு மானியம் கிடைக்காது!

Written By:

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு வழங்கிவந்த மானியத்தை ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. எனவே மைல்டு ஹைபிரிட் வகை கார்களின் ஆன் ரோட் விலை உயர உள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மைல்டு ஹைபிரிட் வகை கார்களை அதிகம் விற்பனை செய்து வரும் மாருதி நிறுவனம் அதிக பாதிப்பை சந்திக்க உள்ளது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

ஹைபிரிட் சார்ந்த அம்சங்களை கொண்ட கார்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்திய அரசின் FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) எனப்படும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

ஏப்ரல் 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 29,000 மற்றும் நான்கு சக்கரங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 1.38 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை வாங்க மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட், பியூர் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

இதில் தற்போது ஆரம்பகட்ட ஹைபிரிட் வாகனங்களான மைல்டு ஹைபிரிட் வாகனங்களுக்கு மட்டும் மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

மைல்டு ஹைபிரிட் வாகனங்கள் முழுமையாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்குவதில்லை, இவற்றில் வழக்கமான இஞ்சினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். வாகனத்தில் பிரேக் அப்ளை செய்யப்படும் போது உருவாகும் ஆற்றலை பேட்டரிகளில் சேமித்துவைத்துக்கொண்டு செயல்படும் இந்த மோட்டார், இஞ்சினுக்கு தேவையான எலெக்ட்ரிக் ஆற்றலை ஓரளவுக்கு வழங்குகிறது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

மாருதி நிறுவனம் மைல்டு ஹைபிரிட் கார்களான எர்டிகா மற்றும் சியாஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது இதன் மூலம் இந்த கார்களுக்கு கிடைத்து வந்த 13,000 ரூபாய் மானியம் இனி தொடர்ந்து கிடைக்காது.

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு மானியம் ரத்து

இதன்மூலம் இந்த வகை கார்களின் எக்ஸ்ஷோரூம் விலை உயராது இருப்பினும், ஆன்ரோடு விலையில் 13,000 வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Government Withdraws Fame Subsidy For Mild Hybrids

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark