ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படி கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் நடைமுறைக்கு வந்தன..!!

Written By:

பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் நடுத்தர அளவு கார்கள், ஆடம்பரக் கார்கள் மற்றும் எஸ்.யூ.வி ரக மாடல்களுக்கு செஸ் வரியை புதியதாக நிர்ணயத்துள்ளது.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

பெட்ரோல் எஞ்சின் கொண்ட கார்களில் 1200சிசி வரை திறன் பெற்ற மாடல்களுக்கும், டீசல் எஞ்சின் கொண்ட கார்களில் 1500சிசி வரை திறன் பெற்ற மாடல்களுக்கும், ஜிஎஸ்டி கவுன்சில் முன்னர் நிர்ணயித்த 43 சதவீத வரிவிதிப்பில் (28 சதவீத ஜிஎஸ்டி + 15 சதவீத செஸ்) எந்தவித மாற்றமும் இல்லை.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி-யின் மூலம் நடுத்தர ரக வாகனங்கள் 45 சதவீத வரிவிதிப்பை பெறுகின்றன (28 சதவீத ஜிஎஸ்டி + 17 சதவீத செஸ்).

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

இதற்கான பரிந்துரையின் கீழ் ஆடம்பரக் கார்களுக்கும் மற்றும் எஸ்.யூ.வி கார்களுக்கும் வேவ்வேறு விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

அதன்படி, ஆடம்பர கார்கள் புதிய ஜிஎஸ்டி-யின் கீழ் 48 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன (20 சதவீத செஸ் + 28 சதவீத ஜிஎஸ்டி).

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

எஸ்யூவி ரக கார்கள் புதிய ஜிஎஸ்டி வரி வதிப்பின் கீழ், 50 சதவீத வரியை எட்டுகின்றன. (50 சதவீத ஜிஎஸ்டி + 22 சதவீத செஸ்)

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

இதன்மூலம் நடுத்தர ரக வாகனங்கள் புதிய ஜிஎஸ்டி-க்கு கீழ் 2 சதவீத விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. ஆடம்பர கார்கள் 5 சதவீதமும், எஸ்யூவி ரக கார்கள் 7 சதவீத அளவில் விலை ஏற்றம் பெற்றுள்ளன.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

பல தரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயத்துள்ள இந்த புதிய விலை விவரங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படி வாகனங்களுக்கான புதிய விலை பட்டியல்

காரின் மாடல் ஜிஎஸ்டி விலை (முன்பு ) ஜிஎஸ்டி விலை (புதியது)
சப் 4-மீட்டர் அளவுகொண்ட வாகனம் (பெட்ரோல், 1200சிசி-க்கு குறைவான திறன்) 28 % ஜிஎஸ்டி + 1% செஸ் = 29% 28% ஜிஎஸ்டி + 1% செஸ் = 29%
சப் 4-மீட்டர் அளவுகொண்ட வாகனம் (டீசல்,l 1500சிசி-க்கு குறைவான திறன்) 28 % ஜிஎஸ்டி + 3% செஸ் = 31% 28 % ஜிஎஸ்டி + 3% செஸ் = 31%
சப் 4-மீட்டர் அளவுகொண்ட வாகனம் (பெட்ரோல், 1200சிசி-க்கும் அதிகமான திறன்/ டீசல், 1500சிசி-க்கும் அதிகமான திறன்) 28% ஜிஎஸ்டி + 15% செஸ்= 43% 28% ஜிஎஸ்டி + 15% செஸ் = 43%
நடுத்தர அளவுக்கொண்ட கார்கள் (4-மீட்டருக்கும் பெரிதான அளவில்) 28% ஜிஎஸ்டி + 15% செஸ்= 43% 28% ஜிஎஸ்டி + 17% செஸ் = 45%
ஆடம்பர கார்கள் (4-மீட்டருக்கும் பெரிதான அளவில்) 28% ஜிஎஸ்டி + 15% செஸ் = 43 % 28% ஜிஎஸ்டி+ 20% செஸ் = 48%
எஸ்யூவி கார்கள் (4-மீட்டருக்கும் பெரிதான அளவில்) 28% ஜிஎஸ்டி + 15% செஸ் = 43% 28% ஜிஎஸ்டி+ 22% செஸ் = 50%
ஹைஃபிர்ட் கார்கள் 28% ஜிஎஸ்டி+ 15% செஸ் = 43% 28% ஜிஎஸ்டி + 15% செஸ் = 43%
மின்சார கார்கள் (EVs) 12% ஜிஎஸ்டி (செஸ் கிடையாது) 12 % ஜிஎஸ்டி (செஸ் கிடையாது)

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

பெரும் விற்பனை திறனை பெற்றுள்ள நடுத்தர ரக கார்கள் முந்தைய வரி விதிப்பில் 46.60% பெற்றிருந்தது. தற்போது ஜிஎஸ்டி-க்கு பிறகு நடுத்தர ரக கார்கள் 45% வரி விதிப்பை பெறுகின்றன.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

இதேபோல எஸ்யூவி கார்கள் ஜிஎஸ்டி-க்கு முன் 55.30% வரி விதிப்பை பெற்றன. தற்போது ஜிஎஸ்டி-க்கு கீழ் 50% வரி மதிப்பை மட்டுமே பெறுகிறது.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

ஜிஎஸ்டி-க்கு பிறகு வாகனங்களின் மதிப்பு உயரும் என்று கருதியவர்களுக்கு, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு பெரும்பாலான வாகன ரகங்கள் குறைந்த விலை மதிப்பையே பெற்றன.

கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி: முழுத் தகவல்கள்..!!

தற்போது ஜிஎஸ்டி வரியில் அதற்கான கவுன்சில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் ஜிஎஸ்டி-க்கு முன்பு அமலில் இருந்த வரியை விட, வாகனங்களின் விலை குறைந்திருப்பது மேலும் தொடர்கிறது.

English summary
Read in Tamil: GST Council has finally set the GST cess on mid-sized, luxury cars and SUVs. Click for Details...
Story first published: Monday, September 11, 2017, 15:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark