நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் டிராக்டர் உதிரிபாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி அமல்..!!

Written By:

டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த புதிய வரி விதிப்பு குறித்து அறிவிப்பு வெளியானது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

நாடு முழுவதும் ஒரே சீரான வரி மதிப்பை தரும் ஜி.எஸ்.டி இன்று நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணியளவில் அமலுக்கு வந்தது.

அதற்கு முன்னதாக நடைபெற்ற டெல்லியில் மத்திய பொருளாதார அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

இன்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜி.எஸ்டி வரி மதிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

ஜிஎஸ்டி வரி மாற்றத்தை மத்திய அரசு முன்னெடுத்த போது, டிராக்டர் உதிரிபாகங்களுக்கு 28 சதவீத வரியும், விவசாய உரங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டு இருந்தது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

இதன் காரணமாக உதிரி பாகங்கள் உட்பட ஒரு டிராக்டரை வாங்கும் செலவும் சுமார் ரூ.30,000 முதல் ரூ.34,000 வரை கூடுதலாக அதிகரிக்கும் நிலை இருந்தது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

மேலும் பி.எம்.டபுள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆடம்பர கார்களை ஜி.எஸ்.டி-யில் குறைவான வரி மதிப்பிற்குள் கொண்டு வந்து விட்டு, விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு 28 சதவீத வரி விதிப்பு ஏற்க முடியாது என்று நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

இதனால் விரைவில் டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை மத்திய அரசு முன்னெடுக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஜிஎஸ்டி அமலாகும் வரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகமல் இருந்த நிலையில், விவசாயிகள் மத்தியில் சோகம் நிலவியது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல், டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அருண் ஜெட்லி உட்பட பலர் டிராக்டர் உதிரிபாகங்கள் மற்றும் விவசாய உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி மதிப்பில் மாற்றம் செய்துள்ளனர்.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

அதன்படி இனி டிராக்டர் உதிரிபாகங்களின் விலை ஜி.எஸ்.டி-யில் 18 சதவீத வரி மதிப்பை பெறும். அதபோல உரங்கள் 5 சதவீத வரி மதிப்பை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

வரி உயர்ந்தால், விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலையும் உயரும். இதை அடிப்படையாக வைத்து பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் ஜி.எஸ்.டியில் விவசாயத்திற்கான வரி உயர்வை மாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தன.

டிராக்டர் உதிர்பாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு..!!

தொடர்ந்து எழுந்த கோரிக்கை காரணமாக இன்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவசாய தேவைகளுக்கான பொருட்களில் வரி விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

English summary
GST Council Lowers tax rate on Tractor parts and Fertilizers. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos