ஜிஎஸ்டி வரி: ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை முக்கால் கோடி ரூபாய் குறைந்தது!

Written By:

ஜிஎஸ்டி வரி எதிரொலியால் கார் மார்க்கெட்டில் பல சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை வாங்க திட்டமிட்டிருந்தோருக்கு, ஜாக்பாட் அடித்துள்ளதாகவே கூற முடியும்.

ஜிஎஸ்டி வரி: ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை முக்கால் கோடி ரூபாய் குறைந்தது!

ஜிஎஸ்டி வரி காரணமாக ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆகிய கார்களின் விலை 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடல் ஃபான்டம். இந்த காரினஅ விலை ரூ.67 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த கார் இப்போது ரூ.6.48 கோடி விலையில் இப்போது கிடைக்கிறது.

இது ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை ரூ.52 லட்சம் வரை குறைந்துள்ளது. நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் போன்றோர் வைத்திருக்கும் இந்த மாடல் இப்போது ரூ. 4.46 கோடி விலையிலிருந்து கிடைக்கிறது. இதேபோன்று, ரோல்ஸ்ராய்ஸ் ரெயீத் மற்றும் டான் கார்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

 ஜாகுவார் எக்ஸ்இ

ஜாகுவார் எக்ஸ்இ

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு காரின் விலை ரூ.3.13 லட்சம் முதல் ரூ.5.83 லட்சம் வரையில் விலை குறைந்துள்ளது. இந்த கார் இப்போது ரூ.35. 89 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எஃப்

ஜாகுவார் எக்ஸ்எஃப்

ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் விலை ரூ.2.85 லட்சம் முதல் ரூ.6.73 லட்சம் வரை குறைந்துள்ளது. தற்போது இந்த கார் ரூ.45.76 லட்சம் விலையில் கிடைக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்ஜே

ஜாகுவார் எக்ஸ்ஜே

ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் விலை ரூ.5.11 லட்சம் முதல் ரூ.10.91 லட்சம் வரை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி.,க்கு பின்னர் இந்த கார் ரூ.96.38 லட்சம் விலையில் கிடைக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் விலை ரூ.4.28 லட்சம் முதல் ரூ.7.57 லட்சம் வரை குறைந்துள்ளது. இனி இந்த எஸ்யூவி ரூ.41. 24 லட்சம் விலையில் கிடைக்கும்.

லேண்ட்ரோவர் எவோக்

லேண்ட்ரோவர் எவோக்

லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் விலை ரூ.10.93 லட்சம் முதல் ரூ.12.35 லட்சம் வரை குறைந்துள்ளது. இனி எவோக் எஸ்யூவி ரூ.43.17 லட்சம் விலையில் கிடைக்கும்.

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியின் விலை ரூ.26.5 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த எஸ்யூவி இனி ரூ.1.08 கோடி விலையில் கிடைக்கும்.

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர்

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் மிக பிரபலமான ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் விலை ரூ.48 லட்சம் வரை குறைந்துள்ளது. இனி இந்த எஸ்யூவி ரூ.1.87 கோடி விலையிலிருந்து கிடைக்கும்.

ஆடி ஏ3

ஆடி ஏ3

ஆடி ஏ6 பெட்ரோல் மாடலின் விலை ரூ.4 லட்சம் வரை குறைந்துள்ளது. ஆடி க்யூ3 எஸ்யூவியின் விலை ரூ.2 லட்சம் வரை குறைந்துள்ளது.

ஆடி க்யூ3

ஆடி க்யூ3

ஆடி ஏ6 பெட்ரோல் மாடலின் விலை ரூ.4 லட்சம் வரை குறைந்துள்ளது. ஆடி க்யூ3 எஸ்யூவியின் விலை ரூ.2 லட்சம் வரை குறைந்துள்ளது.

அஸ்டன் மார்ட்டின் டிபி11

அஸ்டன் மார்ட்டின் டிபி11

அஸ்டன் மார்ட்டின் டிபி11 காரின் விலை ரூ.21 லட்சம் குறைத்துள்ளது. ரூ.4.26 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார் இனி ரூ.4.05 கோடி விலையில் விற்பனை செய்யப்படும்.

ஃபெராரி 488

ஃபெராரி 488

ஃபெராரி 488 காரின் விலை ரூ.30 லட்சம் குறைத்துள்ளது. ரூ.3.88 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார் இனி ரூ.3.58 கோடி விலையிலிருந்து கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை குறைத்துள்ளது. மாநிலத்துக்கு தக்கவாறு இந்த 3 முதல் 9 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஎல்ஏ, சி க்ளாஸ், இ க்ளாஸ், எஸ் க்ளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ் மற்றும் மெர்சிடிஸ் -மேபக் எஸ்500 கார்களின் விலை குறைந்துள்ளது.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜிஎஸ்டி வரியின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7.9 சதவீத வட்டி வீதத்தில் கார் கடன், 3 ஆண்டுகளுக்கான பராமரிப்பு பேக்கேஜ், ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை கூடுதலாக வழங்குகிறது.

English summary
GST Effect: Huge Price Cut on Popular Luxury Cars.
Story first published: Friday, July 7, 2017, 13:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark