ஜிஎஸ்டிக்கு பிறகு மாருதியின் எந்தெந்த கார் மாடல் எவ்வளவு விலை குறையப்போகிறது?

ஜிஎஸ்டிக்கு பிறகு மாருதியின் எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை குறைப்போகிறது?

By Arun

நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஜூலை 1 முதல் அமலாக உள்ளதால். அனைத்து பொருட்களின் விலையிலும் ஏற்ற இறக்கங்கங்கள் இருக்கும்.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

ஆட்டோமொபைல் துறையில் இஞ்சின் அளவைப் பொருத்து விலை ஏற்றம் - இறக்கம் அமையப்போகிறது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

ஜிஎஸ்டியை பொருத்த வரையில் அனைத்து ரக பயணியர் வாகனங்களுக்கும் 28% என்ற நிலையான வரி விதிக்கப்பட உள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

இதில் 1,200சிசிக்கு குறைவாக இஞ்சின்கள் கொண்ட பெட்ரோல் கார்களுக்கு 1% வரி குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

இதே போல 1,500சிசிக்கு குறைவான இஞ்சின் திறன் கொண்ட டீசல் கார்களின் மீதான வரி 3 % குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

பெரிய எஸ்யூவிக்கள் மற்றும் சொகுசுக் கார்களின் மீதான வரி 15% குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

இந்நிலையில், நாட்டின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் மாடல்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியலை வாடிக்கையாளர்கள் உற்று நோக்கியபடி உள்ளனர்.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

ஜிஎஸ்டியின் மூலம் அதிகமான நடுத்தர மாடல் கார்களை கொண்டிருக்கும் மாருதி நிறுவனத்தின் பெரும்பான்மையான மாடல்கள் விலை குறைய உள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

மிட்-சைஸ் செடன், எஸ்யூவி மற்றும் கிராஸோவர் மாடல்கள் மீது குறைவான வரி விதிக்கப்படுவதால் இந்த ரக கார்கள் விலை அதிகமாக குறைய உள்ளது. இதன்படி ரூ.8.79 லட்சம் விலை கொண்ட மாருதி சுசுகியின் எஸ்-கிராஸ் மாடலின் விலையில் ரூ. 70,000 குறையப்போகிறது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

இதே போல மாருதியின் சிறந்த விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடல்களான ஆல்டோ, வேகன்-ஆர், செலிரியோ மற்றும் ஸ்பிஃப்ட் கார்களின் விலையில் 25,000 முதல் 35,000 குறைய உள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

அதிகம் விற்பனையாகும் மாடல்களின் விலை மேலும் குறைய உள்ளதால், அது மாருதி நிறுவனத்திற்கு சாதகமாகவே அமையப்போகிறது. இது விற்பனையை மேலும் உயர்த்த உதவும்.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

ஹைபிரிட் கார்களை பொருத்த வரையில் 12 சதவீதமாக இருக்கும் தற்போதைய வரி ஜிஎஸ்டியில் 43 சதவீதமாக உயர உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டிக்கு பிறகு ஹைபிரிட் கார்களின் விலை பெருமளவில் உயர உள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

‘ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிகிள் சிஸ்டம்' எனப்படும் முழுஅளவு இல்லாத ஹைபிரிட் கார் தொழில்நுட்பம் கொண்ட சியாஸ் மற்றும் எர்டிகா கார்களை மாருதி நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

எனவே ஜிஎஸ்டிக்கு பிறகு ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் மற்றும் எர்டிகா டீசல் கார்கள் விலை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலை ஏறப்போகிறது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

எனினும் வருங்காலத்தில் சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் உள்ள ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக சாதாரண டீசல் கார்களாக மாருதி நிறுவனம் மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

இதே போல மாருதி நிறுவனத்தின் மற்றொரு சிறந்த மாடலான பிரேஸ்ஸா கார்களின் விலையும் 3.5 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.

மாருதி நிறுவன கார்களின் ஜிஎஸ்டிக்கு பிந்தைய விலைப்பட்டியல்..!!

ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதால் மாருதி நிறுவனம் பெரிய அளவுக்கு பாதிப்பை சந்திக்கப் போவதில்லை. மாறாக இது அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கச்செய்து, சாதக அம்சமாகவே அமையவே போகிறது என்பதே இத்துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 30, 2017, 12:03 [IST]
English summary
Read in Tamil about Martuti cars new price list post gst
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+