ஜிஎஸ்டி., எஃபெக்ட்: லட்சங்களில் விலை குறைந்த பிரபல கார் மாடல்கள்!

ஜிஎஸ்டி வரி எதிரொலியால் விலை தடாலடியாக குறைந்த பிரபல கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

By Saravana Rajan

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் பல பிரபல கார் மாடல்களின் விலை தடாலடியாக குறைந்துள்ளது. அந்த கார் மாடல்களையும், விலை குறைப்பு விபரத்தையும் இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை அதிகபட்சமாக ரூ.1.37 லட்சம் வரை தடாலடியாக குறைந்துள்ளது. இது இன்னோவா பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட எக்ஸ்ஷோரூம் விலையில் 13 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி., அமலுக்கு வருவதற்கு முன்னர் ரூ.14.2 லட்சம் முதல் ரூ.22.15 லட்சம் வரையிலான விலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.13.31 லட்சம் முதல் ரூ. 20.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இனி கிடைக்கும். ரூ.89,000 முதல் ரூ.1.37 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா காரின் விலை ரூ.28,000 வரை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் ரூ.7.96 லட்சம் முதல் ரூ.13.17 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி.,க்கு பின்னர் ஹூண்டாய் வெர்னா கார் ரூ.7.28 லட்சம் முதல் ரூ.12.89 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விலை அதிகபட்சமாக ரூ.66,000 வரை குறைந்துள்ளது. ரூ.7.26 லட்சம் முதல் ரூ.9.66 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இனி இந்த எஸ்யூவி ரூ.7.22 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காரின் விலை அதிகபட்சமாக ரூ.28,000 வரை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி.,க்கு முன் ரூ.8.62 லட்சம் முதல் ரூ.13.71 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி.,க்கு பின்னர் ரூ.8.46 லட்சம் முதல் ரூ.13.43 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் விலை அதிகபட்சமாக ரூ.10,000 வரை குறைந்துள்ளது. இதுவரை ரூ.4.63 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார் இனி ரூ.4.53 லட்சம் முதல் ரூ.7.28 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

 டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விலை ரூ.2.17 லட்சம் வரை குறைந்துளளது. அதேபோன்று, டொயோட்டா கரொல்லா காரின் விலை ரூ.92,500 வரை குறைந்துள்ளது.

எட்டியோஸ் செடான் காரின் விலை ரூ.24,500 வரையிலும், லிவா காரின் விலை ரூ.10,500 வரையிலும் குறைந்துள்ளது.

 ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலை ரூ.3 லட்சம் வரை விலை தடாலடியாக குறைந்துள்ளது. ஃபோர்டு ஃபிகோ காரின் விலை ரூ.2,000 வரையிலும், ஈக்கோஸ்போர்ட் விலை ரூ.8,000 வரையிலும் குறைந்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ நிறுவனம் 7 சதவீதம் கார் விலையை குறைத்துள்ளது. இதன் எதிரொலியால் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.30,400 முதல் ரூ.1.04 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

அதேபோன்று, ரெனோ க்விட் க்ளைம்பர் காரின் விலை ரூ.5,200 முதல் ரூ.29,500 வரை குறைந்துள்ளது. லாட்ஜி ஸ்டெப்வே எம்பிவி காரின் விலை ரூ.25,700 முதல் ரூ.88,600 வரை குறைந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை ரூ.1.19 லட்சம் வரை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி.க்கு முன்னர் ரூ.9.29 லட்சம் முதல் ரூ.12.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார் இனி ரூ.8.10 லட்சம் முதல் ரூ.13.54 லட்சம் விலையில் கிடைக்கும்.

டாடா ஹெக்ஸா

டாடா ஹெக்ஸா

டாடா ஹெக்ஸா காரின் விலை ரூ.1.50 லட்சம் வரை குறைந்துள்ளது. ரூ.11.99 லட்சம் முதல் ரூ.17.66 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார் இனி ரூ.10.49 லட்சம் முதல் ரூ.16.16 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் விலை ரூ.50,000 வரை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி.,க்கு முன்னர் ரூ.9.40 லட்சம் முதல் ரூ.14.60 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த எஸ்யூவி ரூ.8.90 லட்சம் முதல் ரூ.14.10 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

ஜிஎஸ்டி., எஃபெக்ட்: லட்சங்களில் விலை குறைந்த பிரபல கார் மாடல்கள்!

ரூ.25 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் பிரபல கார் மாடல்களின் விலை விபரங்களை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

ஜிஎஸ்டி வரியால் சொகுசு கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் விபரங்களை மற்றொரு செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 6, 2017, 14:13 [IST]
English summary
GST Impact On Familiar Car Models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+