புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: சென்னை உயர்நீதமன்றம் தடை!
புதிய வாகனம் வாங்குவதற்கு அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 1ந் தேதி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்து வர வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
அதேபோன்று, அசல் ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே, புதிய வாகனம் வாங்க முடியும் என்ற புதிய உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு வாகனம் வாங்க காத்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் புதிய வாகனம் வாங்க இருந்தோர் மத்தியிலும் இந்த உத்தரவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கார் வாங்குவோரில் சிலர் டிரைவரை அமர்த்தி செல்வது வழக்கம். அவர்களிடத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாதபட்சத்தில், அவர்களால் கார் வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. மேலும், பழகுனர் ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும், வாகனம் வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வாங்கினால் மட்டுமே புதிய வாகனத்தை வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இது பலருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
Recommended Video


ஏனெனில், புதிய ஓட்டுனர் உரிமத்தை வாங்குவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதால், உடனடியாக கார் மற்றும் பைக் வாங்க முடியாத நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த புதிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாகன உரிமையாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பது குறிப்பு நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசின் இந்த உத்தரவுக்கு அதிரடியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனால், பண்டிகை காலத்தில் புதிய கார் மற்றும் வாகனங்களை வாங்க இருந்தோருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும், உடனடியாக புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளிலும் உற்சாகமாக இறங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








