இந்தியாவில் பிரையோ மாடலை பின்பற்றி மின்சார கார் வெளியிடும் ஹோண்டா நிறுவனம் ..!!
இந்தியாவில் பிரையோ மாடலை பின்பற்றி மின்சார கார் வெளியிடும் ஹோண்டா நிறுவனம் ..!!
மாருதி சுஸுகி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவிற்கு ஏற்ற மின்சார கார் விற்பனையில் ஹோண்டாவும் களம் காணவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்காக தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது கார் மாடல்களில் ஒன்றை மின்சார ஆற்றலுக்கு மாற்ற ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஹோண்டாவின் மின்சார கார் அந்நிறுவனம் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் பிரையோ மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படுத்த முடியாத இந்த தகவல்களை தொடர்ந்து, ஹோண்டாவின் மின்சார கார் செடான் மாடலாக இருக்குமா அல்லது ஹேட்ச்பேக் வடிவில் இருக்குமா என்ற விவதாம் ஒரு பக்கம் நடக்கிறது.
Recommended Video


இதுப்பற்றி பேசிய ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், ஞானேஸ்வர் சென், ஹோன்டா இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை துவக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Trending On Drivespark:

அதற்காக அந்நிறுவனம் சர்வதேச அளவில் ஹிடாச்சி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது.

மேலும் பேசிய ஞானேஸ்வர் சென், இந்திய சந்தையில் செடான், ஹேட்ச்பேக் கார் மாடல்களுக்கு பெரிய சந்தை உள்ளது. அதனால் ஹோண்டா காம்பேக்ட் செடான் மாடலில் மின்சார காரை வெளியிடும் என்றார்.

டாடா டிகோர் மாடலில் மின்சார ஆற்றல் கொண்ட கார்களை தயாரித்து வருகிறது. அதேபோல மஹிந்திராவும் இவெரிட்டோ மாடலில் மின்சார காரை வெளியிடுகிறது.

இந்நிலையில் ஹோண்டாவின் மின்சார கார், டாடா மற்றும் மஹிந்திரா தயாரிப்புகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதால், அது காம்பேக்ட் செடான் செக்மென்டை தேர்வு செய்துள்ளது.

ஹோண்டா மின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக இயங்க மற்றொரு காரணமும் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஹைஃப்ரிட் வாகனங்களுக்கான வரியை 43% உயர்த்தியது.

இதனால் ஹைஃப்ரிட் ரக வாகனங்களுக்கான சந்தை குறைந்து, மின்சார கார் வாங்குவதில் மக்களின் ஆர்வம் திரும்பியுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள ஹோண்டா விரும்புகிறது.
Trending On Drivespark:

இந்திய சந்தைக்கு ஏற்ற மின்சார கார் தயாரிப்பில் மாருதி சுஸுகி, டாடா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே களம் கண்டு வருகின்றன.

டொயோட்டா மின்சார கார்களை தயாரிக்காமல், மாருதி சுஸுகியுடன் இணைந்து மின்சார கார்களுக்கான லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான டென்சோக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தவிர ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், குவிட் காரில் மின்சார ரக மாடலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகன பயன்பாடுகளும் மின்சார ஆற்றலுக்கு மாற்றுவது என்பது மத்திய அரசின் நோக்கம்.

இதை புரிந்துக்கொண்டு இந்தியாவின் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது தான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








