ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய உத்தரவால் கார்களின் விலையை உயர்த்தியது ஹோண்டா... முழுத் தகவல்கள்..!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய உத்தரவால் கார்களின் விலையை உயர்த்தியது ஹோண்டா... முழுத் தகவல்கள்..!!

By Azhagar

புதிய ஜிஎஸ்டி செஸ் வரிக்கு ஏற்றவாறு ப்ரீமியம் தர கார்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

இதன்மூலம் சிட்டி செடான், எஸ்யூவி பிஆர்-வி மற்றும் சிஆர்-வி போன்ற கார் மாடல்களின் விலை ரூ. 7,003 முதல் ரூ. 89,069 வரை உயர்வை சந்திக்கின்றன.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி கொள்கை உயர்த்தப்படும் என முன்பே ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்திருந்தது.

பெருத்த எதிர்பாப்பிற்கிடையில் இந்த புதிய வரி விகிதம் இம்மாதம் 11ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

அதன்படி ப்ரீமியம் தர கார்களில் நடுத்தர அளவுக்கொண்ட கார்கள், ஆடம்பரக் கார்கள் மற்றும் எஸ்யூவி போன்ற மாடல்களுக்கான செஸ் வரி 2 முதல் 7 சதவீதம் வரை ஜிஎஸ்டி கவுன்சில் உயர்த்தி உள்ளது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

இதன்காரணமாக இம்மாதம் 11ம் தேதி முதல் ஹோண்டா கார்களில் புதிய ஜிஎஸ்டி வரி கொள்கைக்கு உட்பட மாடல்களின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

இருப்பினும் பிரையோ, அமேஸ் மற்றும் டபுள்யூ-ஆர்.வி போன்ற ஹோண்டாவின் மற்ற விற்பனை திறனை பெற்ற மாடல்கள் இந்த கணக்கில் வராது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

ஹோண்டாவிற்கான விற்பனையில் அதிக திறனை பெற்றுள்ள சிட்டி காரின் விலை வேரியண்டுகளின் அடிப்படையில் ரூ.7,003 முதல் ரூ.18,791 வரை உயர்ந்துள்ளது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

அதேபோல ஹோண்டா பிஆர்-வி காரின் விலை மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ.12,490 முதல் ரூ. 18,242 வரை உயர்வை சந்திக்கிறது.

இதனுடே ஹோண்டா சிஆர்-வி காரின் விலை வடிவமைப்புகள் மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு ரூ.75,034 முதல் ரூ.89,069 வரை உயர்ந்துள்ளது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

இந்தியாவில் ஜிஎஸ்டி முதன்முதலாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அப்போது ஆடம்பர கார்கள், எஸ்யூவி மற்றும் நடுத்தர வாகனங்களின் விலை மேலும் குறைந்தது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

ஆனால் இதற்கான வரி கொள்கையை மாற்ற நினைத்த ஜிஎஸ்டி கவுன்சில் செஸ் வரி விதிப்பில் மட்டும் மாற்றம் செய்து, இந்த ரக கார்களின் வ்ரி கொள்கையை உயர்த்தியது.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

கடந்த 11ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜிஎஸ்டி வரி கொள்கையின் படி, நடுத்தர அளவுக்கொண்ட கார்கள் ஜிஎஸ்டி + செஸ் உடன் 45 சதவீத வரியை பெறுகின்றன.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

ஆடமரக் கார்கள் 48 சதவீதமும், எஸ்யூவி கார்களுக்கு 50 சதவீதமும் புதிய ஜிஎஸ்டி வரி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த புதிய வரி விதிப்பு 4 மீட்டர் அளவை மிஞ்சும் மற்றும் 170 மீமீ கிரவுண்ட் கிளயரன்ஸுக்கு அதிகமான அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைஃபிர்ட் திறன் கொண்ட அனைத்து சிறிய ரக கார்களுக்கு ஜிஸ்டி கவுன்சில் செஸ் வரி விதிப்பில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது..!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவால் சிறிய ரக கார்களுக்கான விற்பனை திறனில் பாதிப்பு இருக்காது என ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Increases Prices Of Its Cars In India After GST Revision. Click for Details...
Story first published: Friday, September 15, 2017, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X