எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

Written By:

வரும் 1ந் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு கொண்டு வரப்பட நிலையில், பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்தும் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது என்பதை இந்த செய்தியில் காணலாம்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், ஹைப்ரிட் கார்களின் விலை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. சிறிய வகை கார்களின் விலையில் அதிக மாற்றங்கள் இருக்காது. எஸ்யூவி உள்ளிட்ட பெரிய வகை வாகனங்களின் விலை குறையும். இதனை சற்று விரிவாக தொடர்ந்து பார்க்கலாம்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான 1,200சிசி திறனுக்கும் குறைவான பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு தற்போது 31.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதுவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 28 சதவீத ஜிஎஸ்டி வரியும், ஒரு சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. இதனால், 29 சதவீத வரி விதிக்கப்படும்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட 1.5 லிட்டர் திறனுக்கும் குறைவான டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய வகை கார்களுக்கு தற்போது 33.25 சதவீத வரி விதிப்பு தற்போது நடைமுறையில் உள்ளது. அதுவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பின்னர் 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் 3 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும். இதனால், 31 சதவீதம் வரிவிதிப்பு நடைமுறைக்கு வர இருக்கிறது.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

4 மீட்டருக்கும் குறைவான நீளமும் 1.5 லிட்டர் திறனுக்கும் குறைவான பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு தற்போது 44.7 சதவீத வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.

இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரியும், 15 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும். இதனால், இந்த வகை கார்களுக்கு இனி 43 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. தற்போதைய வரியைவிட 1.7 சதவீதம் வரி குறையும்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

4 மீட்டருக்கும் கூடுதல் நீளத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5 லிட்டர் திறனுக்கும் மேற்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு தற்போது 51.6 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

அதுவே இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன், 15 சதவீத செஸ் விதிக்கப்படும். இதனால், இந்த வகை கார்களுக்கு 43 சதவீத வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. அதாவது, தற்போதைய முறையைவிட இந்த கார்களுக்கான வரி 8.6 சதவீதம் குறையும்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

எஸ்யூவி வகை கார்களுக்கு தற்போது 55 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாத 15 சதவீத வரி விதிக்கப்படும். இதனால், இந்த கார்களுக்கான வரி 12 சதவீதம் குறையும். இதனால், விலையிலும் அதிக அளவு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்கள் என இரட்டை ஆற்றல் மையங்களை கொண்ட ஹைப்ரிட் வகை கார்களுக்கு தற்போது 30.3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரியும், 15 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. இதனால், 43 சதவீதமாக உயருகிறது. இந்த வகை கார்களுக்கான வரி விதிப்பு 13.3 சதவீதம் கூடுதலாகிறது. இதனால், ஹைப்ரிட் கார்களின் விலை அதிகரிக்கும்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

மின்சார கார்களுக்கு தற்போது 20.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இனி மின்சார கார்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சார கார்களுக்கான வரி 7.5 சதவீதம் குறையும்.

 எந்தெந்த ரக கார்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி: முழு விபரம்!

அதேநேரத்தில், அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி மூலமாக கிடைக்கும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு கார் நிறுவனங்கள் முழுமையாக வழங்குமா என்பது இதுவரை தெரியவில்லை. சில நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரியால் கிடைக்கும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளன. எனவே, கார் டீலர்களில் தீர விசாரித்த பின்னர், கார் முன்பதிவு செய்வது அவசியம்.

தகவல் உதவி: ஆட்டோகார் இந்தியா

English summary
How will GST impact automobile industry?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark