ஹூண்டாயின் வெர்னா உட்பட பல மாடல் கார்களின் விலை அதிகரிப்பு... காரணம் இதுதான்..!!
ஹூண்டாயின் வெர்னா உட்பட பல மாடல் கார்களின் விலை அதிகரிப்பு... காரணம் இதுதான்..!!
ஜிஎஸ்டியில் செஸ் வரியில் மாற்றம் செய்யப்பட்டதால் ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கான புதிய விலை பட்டியலை அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவுப்படி மாற்றியமைக்கப்பட்ட செஸ் வரி காரணமாக ஹூண்டாயின் சில மாடல் கார்கள் ரூ.84,867 வரை வரி உயர்வை பெற்றுள்ளன.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தனது தயாரிப்புகளுக்கான விலை உயர்வு 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஹூண்டாய் கூறியுள்ளது.

கடந்த 11ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விலை ஏற்றத்தால், ஹூண்டாயின் விற்பனை திறன் பெற்ற ஐ20,
வெர்னா, கிரெட்டா, எலென்ட்ரா மற்றும் டஸ்கான் எஸ்யூவி போன்ற கார் மாடல்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

இருப்பினும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, புதிய எக்ஸெண்ட் கார்கள் இந்த புதிய ஜிஎஸ்டி வரிக்கு கீழ் வராது. இந்த வரிசையில் ஐ20 (1.4லிட்டர் பெட்ரோல் ஏடி) கார் மட்டும் ரூ.12,547 விலை உயர்வை சந்திக்கிறது.

மீதமுள்ள ஐ20 வேரியண்டுகள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பின் கீழே விற்கப்படும்.
ஹூண்டாய் மிக எதிர்பார்பிற்கிடையில் சமீபத்தில் வெளியிட்ட வெர்னா செடான் கார் ரூ. 29,090 விலை உயர்வை பெறுகிறது.

ஹூண்டாயுடன் டொயோட்டா, ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் ஜீப் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளுக்கான புதிய விலையை அறிவித்துவிட்டன.

ஹூண்டாய் கார்களின் புதிய விலை பட்டியல்:
| மாடல் | புதிய விலை |
| எலைட் ஐ20 (1.4 லிட்டர் பெட்ரோல் ஏடி) | ரூ.12,547 |
| வெர்னா | ரூ.20,090 வரை விலை உயர்வு |
| கிரெட்டா | ரூ.20,900 முதல் ரூ.55,375 வரை |
| எலென்ட்ரா | ரூ.50,312 முதல் ரூ.75,991 வரை |
| டஸ்கான் | ரூ.64,828 முதல் ரூ.84,867 வரை |

இந்த புதிய கட்டமைப்புப்படி, கார்களுக்கான 28 சதவீத ஜிஎஸ்டி வரியில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் கார்களின் அளவுகளுக்கு ஏற்றவாறு செஸ் வரி 1 முதல் 22 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக விற்பனை திறன் பெற்ற கார் நிறுவனங்களின் ஹுண்டாயும் ஒன்று. தற்போது வந்துள்ள இந்த புதிய வரி ஹூண்டாய்க்கு சற்று சரிவை தரலாம்.

காரணம், தற்போது விழாக்காலம் என்பதால் பலரும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க திட்டம்மிட்டு இருப்பார்கள். அதற்கான விற்பனை திறன் பின்னிடவை சந்திக்கலாம்.

ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விலையை விட, இந்த புதிய வரியால் கார்களின் விலை சற்று குறைவுதான்.
அதை சாதகமாக கருதியும் ஹூண்டாய் உட்பட பல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








