புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது என்ற விபரம் இப்போது வெளியாகி உள்ளது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், கர்லினோ என்ற பெயரில் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலின் கான்செப்ட் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. ஹூண்டாய் பிரியர்களிடம் இந்த எஸ்யூவி மிகுந்த ஆவலை ஏற்படுத்தியது.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

இந்த நிலையில், தற்போது இந்த செக்மென்ட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், கர்லினோ கான்செப்ட் எஸ்யூவி மாடலை தயாரிப்பு நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

வரும் 2019ம் ஆண்டு ஹூண்டாய் கர்லினோ கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளதா ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே. கூ தெரிவித்துள்ளதாக இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அண்மையில் நடந்த புதிய ஹூண்டாய் வெர்னா காரின் அறிமுக நிகழ்ச்சியில் இந்த தகவலை கூ பகிர்ந்து கொண்டுள்ளார்.

Recommended Video

Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

கர்லினோ கான்செப்ட் எஸ்யூவியை தயாரிப்பு நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான 60 சதவீத பணிகள் இந்தியாவிலேயே நடைபெறும். மேலும், கர்லினோ கான்செப்ட் மாடலில் இருந்து தயாரிப்பு நிலை மாடல் அதிக வேறுபாடுகளை கொண்டிருக்கும்.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனையாகும் ஹூண்டாய் ஐ20 காரில் பயன்படுத்தப்படும், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதுதவிர, எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தப்படும்.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று ஹூண்டாய் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்!

விற்பனைக்கு வரும்போது மாருதி பிரெஸ்ஸா காரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும். ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு போல இந்த புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 24, 2017, 10:23 [IST]
English summary
IAB reports that the production version of the Carlino will be launched in the Indian market in the first half of 2019. This was revealed by MD and CEO of Hyundai India, Y K Koo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+