ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் ஆஃபர்- முழு விபரம்!
ஹூண்டாய் கார்களுக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எந்தெந்த காருக்கு எவ்வளவு சேமிப்பு பெற இயலும் என்பதை இந்த செய்தியில் காணலாம்.
புத்தாண்டு பிறப்பதையொட்டி, இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் உள்ள கார்களை விற்று தீர்க்கும் முயற்சிகளை கார் நிறுவனங்கள் துவங்கி இருக்கின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனமும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் இயான்
ஹூண்டாய் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட இயான் காருக்கு ரூ.65,000 மதிப்புடயை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த காரை ரூ.2.95 லட்சம் என்ற சிறப்பு ஆரம்ப விலையில் வாங்கும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். டீசல் மாடலுக்கு ரூ.90,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.4.29 லட்சம் என்ற சிறப்பு ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸென்ட்
ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் ரக செடான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு ரூ.60,000 வரை மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் இப்போது பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.5.29 லட்சம் என்ற சிறப்பு ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ்
ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய கார் மாடல்களுக்கு ரூ.55,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.
Recommended Video


ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் டூஸான்
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரிமியம் ரக கார் மாடல்களான எலான்ட்ரா செடான் கார் மற்றும் டூஸான் எஸ்யூவி மாடல்களுக்கும் சிறப்பு சேமிப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து இந்த புதிய கார் மாடல்களை தேர்வு செய்வோர் ரூ.70,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெற முடியும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட ஹூண்டாய் கார் மாடல்கள் மீது ரூ.10,000 சேமிப்பை பெறும் வாய்ப்பும் உள்ளது. இதுதவிர, சில டீலர்களில் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பும், விலையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

டிசம்பர் 31 வரை இந்த சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும். இந்த சிறப்புச் சேமிப்பு சலுகைகள் குறித்து விரிவான விபரங்களை பெறுவதற்கு அருகிலுள்ள ஹூண்டாய் ஷோரூம்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த சிறப்பு சேமிப்பு சலுகைகள் நிச்சயம் ஹூண்டாய் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு பயனுள்ளதாக அமையும்.


Click it and Unblock the Notifications








