ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

Written By:

கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகளுடன் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாடல்கள் மற்றும் புதிதாக சந்தைக்கு வரும் மாடல்களுக்கான கஸ்டமைஸ் பேக்கேஜ்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது டிசி டிசைன் நிறுவனம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

அண்மையில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் பேக்கேஜை வெளியிட்ட அந்த நிறுவனம் தற்போது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் பேக்கேஜை வெளியிட்டு இருக்கிறது. தனது கஸ்டமைஸ் பணிகளை வெள்ளை வண்ண காரில் செய்து வெளியிட்டு இருக்கிறது டிசி டிசைன் நிறுவனம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

ஹூண்டாய் க்ரெட்டா காரின் முகப்பு க்ரில் அமைப்பு, பனி விளக்குகள் அறை போன்றவற்றில் மாற்றங்கள் செய்துள்ளது. அத்துடன், முகப்பு க்ரில் மற்றும் பனி விளக்கு அறையை சுற்றிலும் இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. பானட்டின் முடிவில் டிசி நிறுவனத்தின் லோகோ நடுநாயகமாக வீற்றிருக்கிறது. பக்கவாட்டில் கூடுதல் பம்பரை சேர்த்துள்ளதுடன், அதுவும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கவர்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

வீல் ஆர்ச்சுகளிலும், கதவுகளிலும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் க்ளாடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பம்பர் வடிவமைப்பு மாறி இருப்பதை காண முடிகிறது. ஆனால், அவற்றை முழுமையாக பார்க்கும் விதத்தில் இதுவரை படங்கள் வெளியிடப்படவில்லை.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

வெளிப்புற வண்ணக் கலவையுடன் ஒத்துப்போகும் விதத்தில், உட்புறத்திலும் இளஞ்சிவப்பு வண்ணத்தின் ஆக்கிரமிப்பு அதிகம். ஃபேப்ரிக் இருக்கைகளுக்கு பதிலாக சிவப்பு வண்ண லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஸ்டீயரிங் வீல், கதவுகளில் உள்ள பேனல்கள் என அனைத்தும் சிவப்பு வண்ணத்திற்கு மாறி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

டேஷ்போர்டிலும், கதவுகளிலும் அலங்கார மரத் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், இந்த சிவப்பு வண்ண அலங்காரம் உட்புறத்தை வித்தியாசமாக காட்டிலும், அது பலருக்கு உறுத்தலாகவே இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கஸ்டமைஸ் பேக்கை வெளியிட்ட டிசி டிசைன்

வாடிக்கையாளர் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிற வண்ணத் தேர்வுகளையும் டிசி டிசைன் நிறுவனம் வழங்கும் என கருதப்படுகிறது. இந்த கஸ்டமைஸ் பேக்கிற்கான கட்டணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Hyundai Creta customized by DC Design.
Story first published: Friday, February 24, 2017, 18:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark