மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனையை தூக்கி சாப்பிட்ட ஹூண்டாய் க்ரான்ட் ஐ10 கார்...!!

Written By:

ஹேட்ச்பேக் மாடல்களில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் காரான மாருதி சுசுகி ஸ்விப்ஃட் மாடலை ஹூண்டாய் கிரான்ட் ஐ10 கார் விற்பனையில் முந்தியுள்ளது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இந்திய வாகன சந்தையில் ஹேட்ச்பேக் மாடல் கார்களுக்கான விற்பனையில் கடந்த இரண்டு மாதங்களாக ஹூண்டாய் கிரான்ட் ஐ10 ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

அதன்படி, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 78,125 யுனிட் கிரான்ட் ஐ10 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இதே மாதங்களில் இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ஹேட்ச்பேக் காராக வலம் வரும் ஸ்விஃப்ட் மாடல் மொத்தம் 78,053 என்ற எண்ணிக்கையில் விற்றுள்ளன.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

ஸ்விஃப்ட் மாடல் விற்பனை கடந்த இரண்டு மாதங்களில் இறங்கியதற்கான காரணம், அதிலுள்ள கியர்பாக்ஸ் தேவை தான் என்று தெரியவந்துள்ளது.

Recommended Video - Watch Now!
[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

கிரான்ட் ஐ10 காரின் 1.2 பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4-ஸ்பீடு டார்கியூ மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவை உள்ளது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

ஆனால் மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இந்த குறையை போக்கும் விதமாக 2018ல் மாருதி சுசுகி புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை வெளியிடுகிறது.

இந்த புதிய மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் குறையை நீக்கி மாருதி நிறுவனம் சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

ஆனால் அடுத்தாண்டு டெல்லியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் போது புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

மாருதி சுசுகி, புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை ஹார்டெக்ட் என்ற பிளாட்ஃபாரமின் கீழ் தயாரித்துள்ளது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இந்த தளம் உயர் ரக ஸ்டீல்களை கொண்டுயிருப்பதால், புதிய ஸ்விஃப்ட் காரின் எடை தற்போதைய மாடலை விட குறைந்திருக்கும். இதனால் காரின் மைலேஜும் கூடும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

1.2 லிட்டர் கே சிரீஸ் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போ சார்ஜிடு டீசல் என்சின் என இருவேறு தேர்வுகளில் புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுகமாகிறது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இதில் பெட்ரோல் மாடல் கார் 82 பிஎச்பி பவர் மற்றும் 112 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். டீசல் மாடல் ஸ்விஃப்ட் கார் 75 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

இந்த இரண்டு எஞ்சின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு இருப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் முதன்முறையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் ஸ்விஃப்ட் வெளிவருகிறது.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடல்களை விட புதிய ஸ்விஃப்ட் கார் பல்வேறு புதிய மாற்றங்களை பெற்றிருக்கும் என்றும்,

அவை பெரியளவில் அதிகப்படியான மாற்றங்களாக இருக்காது எனவும் ஆட்டோ துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விற்பனையில் ஸ்விஃப்ட் காரை முந்திய க்ரான்ட் ஐ10 கார்...!!

புதிய ஸ்விஃப்ட் காரில் தயாரிக்கப்படும் ஹார்டெக்ட் பிளாட்ஃபாரம் கீழ் தான் மாருதி சுசுகியின் புதிய புதிய டிசையர் காரும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Hyundai Grand I10 Outsells Maruti Swift Car. Click for Details...
Story first published: Tuesday, November 14, 2017, 16:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark