பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 ஸ்போர்ட் ஹேட்ச்பேக் மாடல் காரை வெளியிட்டது ஹூண்டாய்..!!

Written By:

இந்தோனேஷியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்டா நகரில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தான் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

அந்த நாட்டின் பயன்பாட்டிற்காக வரவுள்ள புதிய ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார், செயல்திறன் மற்றும் கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் கொண்டு இருக்கவில்லை.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

ஸ்போர்ட்டி தோற்றத்தில் அசத்தலாக இருக்கும் இந்த காரில் பகலிலும் எரியும் எல்.இ.டி விளக்குகள், ரெட் பம்பர் கார்னிஷ், சைடு ஸ்கெர்ட்ஸ், கார் கதவுகளில் போடப்பட்ட பிளாக் வினைல்,

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

சில்வர் நிறத்திலான டிஃபூஸர், 16-இஞ்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் காரின் மேற்கூரையில் உள்ள ரூஃப் ஸ்பாய்லர் போன்ற முதற்கட்ட அம்சங்கள் நம்மை கவனிக்க வைக்கின்றன.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

உள்கட்டமைப்பில் 8-இஞ்ச் தொடுதிரை உடன் கூடிய இன்ஃபோடெய்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் பட்டனஸ், ட்லிட் அல்லது டெலஸ்கோபிக் தேவைகளில் மாற்றியமைக்கப்படும் ஸ்டீயரிங் அட்ஜெஸ்மெண்ட் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்கள் உள்ளன.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

ஐ20 ஸ்போர்ட்ஸ் காரில், 1.4 லிட்டர் திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 98 பிஎச்பி பவர் மற்றும் 113 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

எஞ்சின் தேர்வுகள் மற்றும் மாடல்களுக்கு ஏற்றவாறு இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் கொண்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

தற்போது வரை ஐ20 ஸ்போர்ட் காரின் செயல்திறன் குறித்த எந்த தகவல்களையும் ஹூண்டாய் வெளியிடவில்லை.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

இருந்தாலும் இந்த காரை ஒரு செயல்திறன் மிக்க காராக ஹூண்டாய் சந்தைகளில் விளம்பரப்படுத்த நினைக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ஐ20 காருக்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தாண்டின் ஏதோ ஒரு மாதத்தில் புதிய ஐ20 கார் இந்தியாவில் களமிறங்கலாம்.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

கட்டமைப்பு மற்றும் துணைப் பொருட்களுக்கான தேவைகளில் இந்த கார் எலைட் ஐ20 காரை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

மேலும் ஸ்போர்ட் என்பதற்கான ஐ20 ஸ்போர்ட் காரின் ஹூண்டாய் நிறுவனம் சில சில வடிவமைப்பு மற்றும் தோற்றப் பொலிவை மட்டும் பெரிதாக மாற்றி இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வெளியீடு..!!

இந்தோனேஷியாவில் ஐ20 ஸ்போர்ட் காரை வெளியிட தெரிந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு, இந்தியாவில் இந்த காரை வெளியிடுவது தொடர்பான அறிவிப்பிற்கு மௌனம் சாதிக்கிறது.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Read in Tamil: Hyundai automaker unveiled the i20 sportier iteration hatchback at the 2017 Indonesia International Auto Show. Click for the Details...
Story first published: Saturday, August 12, 2017, 11:43 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark