விலை சலுகை அறிவித்ததற்காக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

Written By:

சிசிஐ எனப்படும் வர்த்தக ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையம் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ): வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான ஒழுங்கீனமான செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசாங்கத்தின் ஒரு அமைப்பு ஆகும்.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

தற்போது இந்த சிசிஐ அமைப்பு, ஒழுங்கற்ற வர்த்தகம் மேற்கொண்டதற்காக கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சலுகை அறிவித்ததே இந்த அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக அளவுக்கு விலை சலுகையை ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ளதாக சிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

ஹூண்டாய் நிறுவனம் அதன் டீலர்களிடத்தில் குறிப்பிட்ட இஞ்சின் லூப்ரிகண்ட்/ஆயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறு கூறியதாகவும், அதனை மீறி வேறு நிறுவன லூப்ரிகண்ட்/ஆயில் பயன்படுத்திய டீலர்களுக்கு அபராதம் விதித்ததாகவும் சிசிஐ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்..!

இந்திய அரசாங்கத்தின் ஒரு அங்கமான சிசிஐ அமைப்பு, ஒழுங்கீனமான வர்த்தக செயல்பாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

சிசிஐ அமைப்பு வாஜ்பாய் அரசாங்கத்தின் போது உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tami about CCI fined hyundai india with rs.87 cr.. reason revealed

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark