மேம்படுத்தப்பட்ட ஆடம்பர வசதிகளை பெற்றிருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20

Written By:

ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காரின் மேம்படுத்தப்பட்ட எலைட் ஐ20 மாடலை வெளியிட்டுள்ளது. ஹேட்ச்பேக் வெர்ஷனான எலைட் ஐ20 காரின் உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு எல்லாம் தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு, மேலும் சில வசதிகளை கூட்டி ஒரு சிறிய அளவிலான ஆடம்பர வாகனமாக ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலை தயாரித்துள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

எலைட் ஐ20 மாடல், இரண்டு விதமான வண்ணங்களின் கலவையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நமக்கு நிறைய நிறங்களில் கிடைக்கக்கூடிய அளவில் எலைட் ஐ20 கார் தயாரிக்கப்பட்டுள்ளது. நிறங்களை தேர்ந்தெடுப்பதில் ஹூண்டாய் மேலும் சில கவனங்களை இந்த காரில் செலுத்தி உள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

தற்போதைய காலகட்டங்களில் பெரும்பாலும் நீல நிறம் கொண்ட கார்களை அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்குவதாகவும், அதனால் எலைட் ஐ20 காரை நீல நிறத்தில் அதிகமாக தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

உள்கட்டமைப்பு வசதிகளை குறித்து நாம் பார்த்தோம் என்றால், வெளிப்புறத்தில் என்ன நிறங்கள் இருந்தாலும் உட்புறத்தில் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று ஹூண்டாயின் எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் மொபைல் ஃபோன்களை இணைத்துக்கொள்ளும் வசதி என பல்வேறு முக்கிய தொழில்நுட்ப அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட எலைட் ஐ20 காரில் ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

பழைய ஐ20 மாடல் கார்களிலிருந்த அதே எஞ்சின் தான் இதிலும் உள்ளது. 1.2 பெட்ரோலில் இயங்கும் எலைட் ஐ20 காரின் எஞ்சின் 82 பி.எச்.பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை அளிக்கும். காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

ஆட்டோமேடட் கியர் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் மாடலிலும் எலைட் ஐ20 கார் கிடைக்கிறது. அதற்கான மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும், அது 99 பி.எச்.பி பவர் மற்றும் 132 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

பெட்ரோல் எஞ்சின் கொண்டு இயங்கும் ஹீண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.5.56 லட்சத்திலிருந்து, ரூ. 9.09 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படும். மேலும் டீசல் எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் ஹூண்டாய் ஐ20 தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான விலை ரூ.6.61 லட்சத்திலிருந்து ரூ.8.51 லட்சம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil Hyundai launched Elite i20 with 3 engine and 2 transmission and 2 fuel options. Click for to get details about design, variants, price, mileage and more...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark