580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 580 கிமீ தூரம் பயணிக்கும் புதிய மின்சார எஸ்யூவி காரை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மின்சார கார் தயாரிப்புக்கு ஹூண்டாய் கார் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் புதிய மின்சார எஸ்யூவி காரை வெளியிட்டு இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.

580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எஃப்இ ஃப்யூவல் செல் கான்செப்ட் கார் மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மின்சார எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் மின் மோட்டார் 163 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஸ்யூவி மிகுந்த திறன் வாய்ந்ததாக இருக்கும் என்றும் ஹூண்டாய் கூறி இருக்கிறது.

Recommended Video

2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

இந்த எஸ்யூவியில் ஒருமுறை ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பினால், அதிகபட்சமாக 580 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது. இதற்காக மூன்று ஹைட்ரஜன் எரிபொருள் கொள்கலன்கள் இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய மின்சார எஸ்யூவி மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டிசைன் தாத்பரிய கொள்கைகளின் கீழ் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

மெல்லிய ஹெட்லைட்டுகள், பகல் நேர விளக்குகள் என புதிய பரிமாணத்தில் ஹூண்டாய் கார்களை கொண்டு செல்வதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த காரின் டிசைனை கூறலாம். உட்புறமும் மிக எளிமையான வடிவமைப்பை பெற்றிருப்பதுடன், நவீன தொழில்நுட்ப விஷயங்கள் ஏராளமாக இடம்பெற்றிருக்கிறது.

580 கிமீ தூரம் பயணிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

ஹூண்டாய் டூஸான் ஃப்யூவல் செல் மின்சார எஸ்யூவி காருக்கு மாற்றாக இந்த புதிய எஃப்இ ஃப்யூவல் செல் மின்சார எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் டெஸ்லா கார்களுக்கு போட்டியாக அமையும் என்று இப்போதே ஆருடங்கள் தொடங்கிவிட்டன.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2017, 18:28 [IST]
English summary
South Korean automaker Hyundai has revealed its new electric SUV powered by a hydrogen fuel cell in Seol. The near production-spec model is based on the FE Fuel Cell Concept showcased at the 2017 Geneva Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+