ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

Written By:

பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது தாயகமான தென் கொரியாவில் நடந்த கண்காட்சியில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

கடந்த 2010ம் ஆண்டே எலக்ட்ரிக் பஸ் மாடல் ஒன்றை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பஸ் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவையை மனதில் வைத்து இந்த புதிய பஸ் எலக்ட்ரிக் பஸ் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

எலக் சிட்டி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய பஸ்சை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 256KWh திறன் கொண்ட லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 290 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

இந்த பேட்டரியை வெறும் 67 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். எனவே, இந்த பஸ் நகரங்களில் இயக்குவதற்கு ஏதுவான அம்சங்களை பெற்றிருக்கிறது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

இந்த பஸ்சில் 240kWh திறன் கொண்ட மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மின்மோட்டார்கள் சிறப்பான செயல்திறனை வழங்கும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

சாதாரணமாக டீசலில் இயங்கும் பஸ்சிற்கான எரிபொருள் செலவீனத்தை ஒப்பிடும்போது, இந்த மின்சார பஸ்சிற்கான எரிபொருள் செலவு மூன்றில் ஒருபங்காக மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

இந்த பஸ்சில் அளவை தாண்டி பேட்டரி ஓவர்சார்ஜ் ஆவதை தடுப்பதற்கான விசேஷ கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது. மேலும், பல்வேறு விசேஷ தீத்தடுப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

எதிர்காலத்தில் பொது போக்குவரத்துக்கான சிறந்த போக்குவரத்து சாதனமாக எலக் சிட்டி பஸ் இருக்கும். முழுமையான எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் ஹூண்டாய் மோட்டார்ஸ் முன்னோடியாக இருப்பதை இந்த பஸ் காட்டுவதாக அமைந்துள்ளது என ஹூண்டாய் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

மின்சார வாகனங்களில் அதிக பயண தூரத்தை வழங்காது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனை உடைக்கும் விதத்தில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 290 கிமீ தூரம் வரை பயணிக்கும் கனரக வகையில் இந்த பஸ்சை ஹூண்டாய் உருவாக்கி இருப்பது நிச்சயம் குறிப்பிடத்தக்க சாதனையாகவே கூற முடியும்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
South Korean automaker Hyundai has revealed an all-electric bus in Korea. It's the second attempt from the company to create an electric bus.
Story first published: Tuesday, June 6, 2017, 16:06 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark