டாடா டியாகோ, சுசுகி செலிரியோ மாடல்களுக்கு போட்டியாக சிறிய ரக காரை தயாரிக்கும் ஹூண்டாய்..!!

Written By:

இந்திய சாலைகளுக்கு தகுந்தவாறான புத்திய புதிய சிறிய ரக காரை உருவாக்கும் முயற்சியில் ஹூண்டாய் நிறுவனம் இறங்கியுள்ளது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

இதுகுறித்து ஃபைனாசியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஹூண்டாய் தயாரிக்கும் இந்த சிறிய ரக கார்

முற்றிலும் புதிய கட்டமைப்பை கொண்டு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

மேலும் இந்த சிறிய அளவிலான கார், எந்தவிதத்திலும் சான்ட்ரோவை பின்பற்றி உருவாக்கப்பட மாட்டாது என ஹூண்டாயின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான புனித் ஆனந்த் கூறியுள்ளார்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

2017 வெர்னா காரை வெளியிடும் விழாவிலே இப்படி ஒரு திட்டம் தங்களிடம் உள்ளது என்பதை ஹூண்டாய் தெரிவித்திருந்தது. தோராயமாக இந்த புதிய கார் 2018ல் மத்தியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

இந்த அறிவிப்பின் மூலம் சான்ட்ரோ காரின் புதிய தலைமுறை கார் வெளிவருகிறது என்பது தொடர்பான செய்திகளுக்கு ஹூண்டாய் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

சான்ட்ரோ என்ற பெயரில் தான் இந்த புதிய ரக சிறிய கார் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்பத்தில் உருவாகும் சிறய மாற்றங்களால் ஹூண்டாய் இதை புதிய பெயரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக புனித் ஆனந்த் தெரிவித்தார்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

ஹூண்டாயின் புதிய தலைமுறைக்கான இந்த ஹேட்ச்பேக் மாடல், கிராண்ட் ஐ10 காரில் இருப்பது போன்ற 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படவுள்ளது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

ஆனால் இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டு இருப்பது தான் ஹூண்டாயின் தயாரிக்கும் இந்த சிறிய ரக காரின் சிறப்பம்சம்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

காருக்கான டிசைனில் இந்த புதிய ரக ஹேட்ச்பேக் மாடல் அதிக இடவசதியும் மற்றும் சான்ட்ரோவை விட சற்று பெரிதாகவும் தயாரிக்கப்படவுள்ளது.

மேலும் கிராஸ்ஓவர் காரின் சில வடிவமைப்பு நுட்பங்களை ஹூண்டாயின் சிறிய ரக கார் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

தெளிவாக பார்த்தால் ஹூண்டாய் தயாரிக்கும் புதிய தலைமுறைக்கான சிறிய ரக கார் இயான் மற்றும் கிராண்ட் ஐ10 மாடல்களுக்கு இடையிலான வடிவமைப்பை பெறலாம்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

மேலும் ஹேட்பேக்கை தவிர புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை 2019ல் அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

இந்த எஸ்யூவி கார் மாருதி சுசுகியின் விட்டாரா பிரிஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காருக்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

புதிய தலைமுறைக்கான ஹூண்டாய் கார் நவீன அளவிலான பல கட்டமைப்புகளை பெற்றிருக்கும்.

மேலும் காருக்கான மாடல் தேவைகளை அராய்ந்தால் டாடா டியாகோ மற்றும் சுசுகி செலேரியோ மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

புதிய ஹேட்ச்பேக் திட்டத்துடன் களமிறங்கும் ஹூண்டாய்..!!

காரின் டிசைன், மாடல், நவீன கட்டமைப்புகள் போன்றவற்றில் சிறந்த செயல்பாடு மற்றும் செயல்திறனை கொண்டு ஹூண்டாய் தயாரிக்கும் இந்த கார் ரூ.4 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Hyundai is developing an all-new small car for the Indian market will not use the Santro moniker for the new car. Click for Details...
Story first published: Wednesday, September 20, 2017, 13:08 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark