இந்தியாவில் 3வது தலைமுறைக்கான 2017 ஹூண்டாய் வெர்னா கார் ரூ. 7.99 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்..!!

இந்தியாவில் 3வது தலைமுறைக்கான 2017 ஹூண்டாய் வெர்னா கார் ரூ. 7.99 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்..!!

By Azhagar

ஹூண்டாயின் மூன்றாவது தலைமுறைக்கான வெர்னா கார் இந்தியாவில் ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

இந்தியாவில் வரவேற்பு பெற்ற செடான் கார்களில் ஒன்றான வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுசுகி சியாஸ் கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் தலா 6 வித வேரியண்டுகளில் என ஹூண்டாய் வெர்னா அறிமுகமாகி உள்ளது.

2017 பெட்ரோல் மாடல் வெர்னா காரின் இ.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஓ) என்ற வேரியண்டுகள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளன.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

புதிய வெர்னா காரின் டீசல் மாடல் காரில் இ.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் பிளஸ் வேரியண்டுகள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளன.

தற்போது வெளிவந்துள்ள வெர்னா காரில் 3 வருடங்கள் வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தை ஹூண்டாய் வழங்குகிறது.

Recommended Video

2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

மேலும் மேம்கேர் சேட் நேவிகேஷன் சிஸ்டத்துடன் கூடிய மூன்று வித மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட ரோடுசைடு அஸிஸ்செட்டன்ஸையும் இந்த கார் பெற்றுள்ளது.

2017 வெர்னா காரின் வேரியண்டுகள்

2017 வெர்னா காரின் வேரியண்டுகள்

ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் மாடல் காரில் உள்ள வேரியண்டுகள் மற்றும் அதற்கான விலைப்பட்டியல்.

வேரியண்ட் விலை
ஹூண்டாய் வெர்னா இ ரூ.7,99,900
ஹூண்டாய் வெர்னா இ.எக்ஸ் ரூ.9,06,900
ஹூண்டாய் வெர்னா இ.எக்ஸ் ஏ.டி ரூ.10,22,900
ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ் ரூ.9,49,900
ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ் (ஓ) ரூ.11,08,900
ஹூண்டாய் வெர்னாஸ் எஸ்.எக்ஸ். (ஓ) ஏ.டி ரூ.12,23,900
ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

ஹூண்டாய் வெர்னா டீசல் மாடல் காரில் உள்ள வேரியண்டுகள் மற்றும் விலைப்பட்டியல்.

வேரியண்ட் விலை
ஹூண்டாய் வெர்னா இ ரூ.9,19,900
ஹூண்டாய் வெர்னா இ.எக்ஸ் ரூ.9,99,900
ஹூண்டாய் வெர்னா இ.எக்ஸ் ஏ.டி ரூ.11,39,900
ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ் ரூ.11,11,900
ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ்+ஏடி ரூ.12,61,900
ஹூண்டாய் வெர்னாஸ் எஸ்.எக்ஸ். (ஓ) ரூ.12,39,900
எஞ்சின் & மைலேஜ்

எஞ்சின் & மைலேஜ்

முற்றிலும் புதியதாக வெளியாகியுள்ள வெர்னா காரில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளில் மாடல்களுக்கு ஏற்றவாறு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

பெட்ரோல் மாடல் வெர்னா காரில் 1591சிசி திறன் பெற்ற 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 121 பிஎச்பி பவர் மற்றும் 151 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் டீசல் மாடல் காரில் 1582சிசி திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. இது 126 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

பெட்ரோல் மாடல் கார் ஒரு லிட்டருக்கு 17.7கி.மீ மைலேஜ் தருவதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது. அதேபோல இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 24.76 கி.மீ மைலேஜ் தருவதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

ஹூண்டாய் நிறுவனத்தின் கே2 பிளாட்ஃபாரம் கீழ் தான் 2017 வெர்னா கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் காரின் பிடிமானம் மற்றும் கட்டமைப்பு மிகவும் வலுவுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக நமக்கு தெரியவருகிறது.

டிசைன் மற்றும் அம்சங்கள்

டிசைன் மற்றும் அம்சங்கள்

ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு மாடலான எலெண்ட்ரா காரை போல மிகவும் கூர்மையான வடிவமைப்பு நுணுக்கங்களை புதிய வெர்னா பெற்றுள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

காரின் முன் பக்கதில் பகலிலும் எரியும் தன்மைக்கொண்ட ஸ்போர்டியான பிரொஜக்டர் ஹெட்லேம்ப்ஸ், கிரோம் சுற்றுப்புறத்தை கொண்ட பிரொஜக்டர் ஃபாக் லேம்ப்ஸ் உள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

கேஸ்கேட் டிசைனில் தயாராகி உள்ள ஹூண்டாய் 2017 வெர்னா காரின் முன்பக்க க்ரில் க்ரோம் கொண்டு இழைக்கப்பட்டுள்ளது.

16 இஞ்ச் டைமண்ட் கட் ஆல்யாய் சக்கரங்கள், ஸ்போர்ட்ஸ் கூர்மை கொண்ட எல்.இ.டி டெயில்லேம்ப்ஸ் மற்றும் கிரோம் கொண்டு விவரிக்கப்பட்ட பூட் ஆகியவை இதில் உள்ளன.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா வெளியானது!

மேலும் இந்த கார் போலார் வைட், சீலிக் சில்வர், ஸ்டார் டஸ்ட், சியரா பிரவுன், ஃபிலேம் ஆரஞ்சு, ஃபியர் ரெட் மற்றும் ஃபான்டம் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

காரின் உள்கட்டமைப்புகள் ஆரஞ்சு மற்றும் பீஜ் நிறங்களை கொண்ட டூயல் டோன்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனுடைய டாப்-ஸ்பெக் வேரியண்டில் இருக்கைகள் லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

வெர்னா காரில் உள்ள வேரியண்டுகளின் படி காரின் டாஷ்போர்டில் 5 அல்லது 7 இஞ்ச் கொண்ட தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

7 இஞ்ச் கொண்ட இன்ஃபோடெய்ன்மென்ட் அமைப்பில் ஆண்டார்ய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, சேட்டிலைட் நேவிகேஷனுடன் கூடிய மிரர் லிங்க் ஆகிய அம்சங்கள் உள்ளன.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

மேலும் 2017 ஹூண்டாய் வெர்னா காரில் க்ரூஸ் கண்ட்ரோ, ரியர் கர்டேன், புஷ்-பட்டன் ஸ்டார்ட், மின்சாரத்தால் இயங்கும் சன்ரூஃப், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அமசங்கள் உள்ளன

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

ஹூண்டாய் வெர்னாவில் உள்ள அனைத்து வேரியண்டுகளிலும் 2 ஏர்பேகுகள் கட்டாயமாக இடம்பெற்றிருக்கும். டாப் ஸ்பெக் எஸ்.எக்ஸ். (ஓ) மாடலில் மட்டும் மொத்தமாக 6 ஏர்பேகுகள் இருக்கும்.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

மற்ற அனைத்து மாடல்களிலும் ஏபிஸ், இபிடி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சம், சீட்பெல்ட்டிற்கான அலெர்ட் போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

இந்த காரின் ரியர்வியூ கேமராவில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பார்கிங் செய்வதற்காக வழிமுறைகள் தரும் அம்சமும் இருக்கிறது.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

2017 ஹூண்டா வெர்னா காரில் எஞ்சின் மற்றும் வடிவமைப்புகள் மிகவும் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்புகளும், டூயல்-டோன் இண்டீரியர்களும் இந்த காரை சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும்.

ரூ.7.99 லட்சம் விலையில் 2017 ஹூண்டாய் வெர்னா கார் வெளியானது!

ஆதி முதல் அந்தம் வரை 2017 வெர்னா காரில் ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த கட்டமைப்பு பணிகள் நிச்சயம் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸிற்கு பெரிய போட்டியை களத்தில் உருவாக்கும்.

Most Read Articles
English summary
Read in Tamil: Hyundai Verna is the third generation of the executive sedan to make its way into India. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X