புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

Written By:

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் வெர்னா கார் நேற்று முன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதிய ஹூண்டாய் வெர்னா காரின் புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் குறைவான விலை மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

தற்போது புதிய ஹூண்டாய் வெர்னா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பழைய மாடலில் இருந்த 1.4 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனிலும் புதிய ஹூண்டாய் வெர்னா கார் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் பெட்ரோல் மாடல் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.12.70 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலை அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்? 1

அதாவது, முதலில் முன்பதிவு செய்யும் 20,000 பேருக்கு மட்டுமே இந்த விலையில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் கிடைக்கும். இந்த காரின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

ஏற்கனவே விற்பனையில் இருந்த 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் புதிய ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மட்டுமே வரும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் குறைவான விலை மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, தற்போதுள்ள மாடல்களின் விலை உயர்த்தப்பட்டால்கூட, புதிய எஞ்சின் ஆப்ஷன்களில் வந்தால், வெர்னா வாங்கும் கனவு வாடிக்கையாளர்களுக்கு வசப்படும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் குறைவான விலை மாடல்கள் விரைவில் அறிமுகம்?

அப்படி வரும்பட்சத்தில், ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் போன்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தரும் என நம்பலாம்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
பழைய ஹூண்டாய் வெர்னா கார் போன்றே, புதிய வெர்னா காரிலும் 1.4 லிட்டர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Story first published: Friday, August 25, 2017, 15:47 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark