ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் புதிய ஹூண்டாய் வெர்னா!

Written By:

விற்பனையில் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்துள்ளது புதிய ஹூண்டாய் வெர்னா கார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்த புதிய வெர்னா!

கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்தததிலிருந்து, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது புதிய ஹூண்டாய் வெர்னா.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்த புதிய வெர்னா!

இரண்டு மாதங்களில் சுமார் 1.50 லட்சம் விசாரணைகளையும், 20,000 முன்பதிவுகளையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இந்த கார் 5,000 புதிய வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எக்கானமிக் டைம்ஸ் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்த புதிய வெர்னா!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஜாம்பவான் மாடல்களான ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களை புதிய வெர்னா விற்பனையில் ஓவர்டேக் செய்துள்ளது. கடந்த மாதம் 4,366 ஹோண்டா சிட்டி கார்களும், 4,107 மாருதி சியாஸ் கார்களும் விற்பனையாகி உள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்த புதிய வெர்னா!

இந்த நிலையில், ஹூண்டாய் வெர்னா கார் விற்பனையில் 5,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை தவிர்த்து, புதிய வெர்னா காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு பல காரணங்கள் உண்டு.

பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் கிடைக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும் அளிக்க வல்லது.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை ஓவர்டேக் செய்த புதிய வெர்னா!

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களில் பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. ஆனால், புதிய வெர்னாவில் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது. விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா வசதியும் உள்ளது.

முதல்முறையாக...

முதல்முறையாக...

இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக ஹேண்ட்ஸ்ஃப்ரீ பூட் லிட், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கூல்டு சீட்டுகள், ஆட்டோமேட்டிக் ஏசி வசதிகள் உள்ளன. தவிர, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 விலை

விலை

ஹோண்டா சிட்டி காரின் விலை உயர்ந்த மாடலுடன் புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விலை உயர்ந்த மாடலை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை குறைவாக இருக்கிறது. எனவே, புதிய ஹூண்டாய் வெர்னா வாடிக்கையாளர் மனதில் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai India launched the new-generation Verna in India ahead of the festive season, and within two months, the executive sedan is off to an excellent start.
Story first published: Saturday, November 4, 2017, 17:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark