ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வந்தால் விலை பாதியாக குறையும்!

Written By:

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை பாதியாக குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15வ நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வந்தன. இந்த நிலையில், கடந்த ஜூன் 16ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அதுகுறித்து செய்திகுறிப்பு வெளியிடப்பட்டு ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் எழுந்து வந்தன.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

ஆனால், தினசரி மாற்றம் செய்யும் முறை அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பொதுமக்களுக்கு எந்த தகவலும் இல்லாத நிலை ஏற்பட்டது. இச்சூழலில், கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.51 காசுகள் ஏற்றம் கண்டிருக்கிறது. கண்ணுக்கு தெரியாமல் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

கடந்த ஜூலை 1ந் தேதி லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே ஆகஸ்ட் 1ந் தேதி 67 ரூபாய் 71 காசுகளாக அதிகரித்தது. செப்டம்பர் 1ந் தேதி பெட்ரோல் விலை 72 ரூபாய் 92 காசுகளாக உயர்ந்தது. இதே நிலைதான் டீசலுக்கும் ஏற்பட்டுள்ளது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு ரூ.30.70 காசுகள் என்ற விலையில் பெட்ரோல் வழங்கப்படுகிறது. ஆனால், சந்தையில் ரூ.70.39 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.39.41 காசுகள் வரி மற்றும் டீலர் கமிஷனாக செல்கிறது. இது பாதிக்கு பாதி அதிமாக இருக்கிறது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி நடைமுறையிலிருந்து பெட்ரோல், டீசலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலைக்கு நிர்ணயிக்கப்படும் வரியின் அளவு தொடர்ந்து கணிசமாக இருக்கிறது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

ஒருவேளை, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு இருப்பதால்தான், அதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்பட்டால் பாதியாக கூட குறையும் வாய்ப்பு இருக்கிறது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

ஆம். ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோலுக்கு 12 சதவீத வரி விதித்தால் லிட்டர் பெட்ரோல் ரூ.38.10 என்ற விலைக்கு விற்பனை செய்ய முடியும். தற்போதைய விலையை விட ரூ.32 வரை குறையும். அதுவே, அதிகபட்ச ஜிஎஸ்டி வரியான 28 சதவீதத்தை விதித்தால் கூட லிட்டர் ரூ. 50.91 என்ற விலையில் விற்பனை செய்ய முடியும்.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

தற்போது டீசல் லிட்டருக்கு ரூ.58.72 காசுகள் என்ற விலையில் டெல்லியில் விற்பனையாகிறது. இதுவே, டீசலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தால் லிட்டர் ரூ.36.65 காசுகளாக குறையும். அதாவது, ரூ.20 வரை குறையும். அதிகபட்சமான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தால் கூட லிட்டர் ரூ.49.08 என்ற அளவில் குறையும். தற்போதைய விலையை விட ரூ.9.64 காசுகள் குறைவாக இருக்கும்.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி புஸ்வானம் ஆகிவிடுகிறது. ஏனெனில், பொன்முட்டையிடும் வாத்து போல பெட்ரோல், டீசல் விற்பனை மூலமாக கிடைக்கும் வரி வருவாய் அரசுக்கு கைகொடுத்து வருகிறது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் மாற்றும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறி இருக்கிறார். இது பொதுமக்களுக்கும், வாகன பயன்பாட்டாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 ஆக குறையும்!

தெற்காசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று பாஜக., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமியும் கூறி இருக்கிறார். மொத்தத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. குறைவதற்கான அறிகுறியே இல்லை என்பது புலனாகிறது.

English summary
If Petrol, Diesel Price come under GST, What will be the price?
Story first published: Friday, September 15, 2017, 14:23 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark